போக்குவரத்து தொழிலாளர்கள் முத்தரப்பு பேச்சு வார்த்தை இன்று மாலை 3 மணி அளவில் நடைபெறுகிறது. ஊதிய உயர்வு, அகவிலைப்படி நிலுவை,கருணை அடிப்படையில் விண்ணப்பித்துக் காத்திருக்கும் நபர்களுக்கு பணி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றக் கோரி சி.ஐ.டி.யு. ஏ.ஐ.டி.யு.சி., அண்ணா தொழிற் சங்கப் பேரவை உள்ளிட்ட பல்வேறு தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீசை வழங்கினர். பின்னர் இது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தையில் தோல்வியில் முடிந்ததால் கடந்த மாதம் ஜனவரி 9, 10 ஆகிய தேதிகளில் போக்குவரத்துத் தொழிலாளர்கள் […]
அகவிலைப்படி உயர்வு உள்ளிட்ட 6 கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 19-ஆம் தேதி தொழிற்சங்கத்தினர் வேலை நிறுத்த நோட்டீஸ் வழங்கினர். இதைத்தொடர்ந்து, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தையை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும் , ஜனவரி 3 மற்றும் 5 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் ஜனவரி 9, 10-ம் தேதிகளில் போக்குவரத்து ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை […]
தமிழ்நாட்டில் போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது, வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான். போராட்டம் நடத்த உரிமை உள்ளது, ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த […]
தமிழ்நாடு முழுவதும் அரசு போக்குவரத்து ஊழியர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடங்கியுள்ளனர். காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம், 15-வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி, போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தையை கடந்த டிசம்பர் 27 ஆம் தேதியும், ஜனவரி 3 ஆம் தேதியும் நடைபெற்றது. இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து […]
ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பண்டிகை காலத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் போக்குவரத்து ஊழியர்கள் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகியுள்ளனர். அதுமட்டுமில்லாமல், தமிழகம் முழுவதும் இன்று போக்குவரத்துக்கு கழக தொழிலாளர்கள் பணிமனை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் சென்னையில் பல்லவன் இல்லத்தை முற்றுகையிட்டு போக்குவரத்துக்கு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்று தமிழகம் முழுவதும் முற்றுகை போராட்டம் நடைபெறுவதால், போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சென்னை […]
தமிழ்நாடு முழுவதும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனுத் தாக்கல் செய்திருந்தார். பொங்கல் நெருங்கி வரும் நேரத்தில் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என கூறி மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று காலை சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டது. அதன்படி, […]
ஊதியம், காலி பணியிடங்கள் நிரப்புதல், அனைத்து அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கும் மாநில அரசின் நிதியுதவி, ஓய்வூதியர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உள்ளிட்ட 6 முக்கிய கோரிக்கைகளை தொழிற்சங்கங்கள் முன்வைத்து தொடர் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இந்த சூழலில், தமிழ்நாட்டில் போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளது. இந்த சமயத்தில், பொங்கல் பண்டிகை வரவுள்ளதால் ஜனவரி 9ம் தேதி முதல் தமிழகத்தில் அரசுப் பேருந்து சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில், போக்குவரத்து ஊழியர்களுக்கு தமிழக போக்குவரத்துத்துறை […]
டிசம்பர் 2ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெள்ளிகிழமை அன்று, பிற்பகல் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் வைத்து போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில், சென்னை எம்.டி.சி பேருந்து ஊழியர்கள் சங்க நிர்வாகிகள், அரசு விரைவு போக்குவரத்து துறை ஊழியர்கள் சங்க முக்கிய நிர்வாகிகள், பதிவுபெற்ற போக்குவரத்து சங்க […]
ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய ஓய்வுகாலப் பயன்களை காலந்தாழ்த்தாமல் வழங்க தி.மு.க. அரசை வலியுறுத்தி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்களில் பணிபுரியும் போக்குவரத்து பணியாளர்களுக்கான ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று வாக்குறுதி அளித்து ஆட்சிக் கட்டிலில் அமர்ந்த தி.மு.க., ஆட்சியமைத்து பத்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாததோடு மட்டுமல்லாமல், ஓய்வு பெற்றவர்களுக்கு அளிக்க வேண்டிய ஓய்வூதியப் பயன்களையும், அகவிலைப் […]
பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்க வாய்ப்பு இல்லை என அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். திருநெல்வேலியில் 15 வயது முதல் 18 வயது வரையிலான பள்ளி சிறார்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் முகாமினை, போக்குவரத்துதுறை அமைச்சர் ராஜகண்ணப்பன் இன்று தொடங்கி வைத்தார்கள். இதனிடையே, செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், தீபாவளி பண்டிகைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டதை போல் பொங்கலுக்கும் சிறப்பு பேருந்துகள் கிட்டத்தட்ட 17,000 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவித்தார். மக்கள் எந்தவித பாதிப்பும், சிரமமில்லாமலும் பயணம் செய்வதற்கு ஏற்பாடு செய்யப்படும் […]