பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிப்பு. பி.இ, பி.டேக்கில் நேரடி இரண்டாம் ஆண்டு மாணவர் சேர்க்கைகான அவகாசம் ஆகஸ்ட் 3ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இன்றுடன் முடியவிருந்த அவகாசத்தை நீட்டித்து தொழில்நுட்ப கல்வி இயக்கக ஆணையர் லட்சுமி பிரியா ஆணை வெளியிட்டுள்ளார். பாலிடெக்னிக் டிப்ளமோ மூன்றாம் ஆண்டு மாணவர்களின் செமஸ்டர் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பொறியியல் படிப்பிற்கான தரவரிசை பட்டியல் வெளியீடு. பொறியியல் படிப்பில் சேர விரும்பும் மாணவர்கள், ஜூலை 26-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ஆம் தேதி வரை இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து, ஆன்லைன் மூலம் சுமார் 1 லட்சத்து 74 ஆயிரத்து 930 மாணவர்கள் விண்ணப்பித்தனர். இதனை எடுத்து பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது இன்று தரவரிசை பட்டியலை தொழில்நுட்ப கல்வி இயக்குனரகம் வெளியிட்டுள்ளது. பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க கட்டணம் […]
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் , போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் , தரமற்ற ஆசிரியர்கள் இல்லாமல் இயங்கும் பொறியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளை இந்திய மருத்துவ மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் கண்காணித்து வருகிறது என்று தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் பேசிய அவர், மாணவர்கள் குறிப்பாக மருத்துவம் படிக்க கூடிய மாணவர்கள் இதனால் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகளை இந்திய மருத்துவ கவுன்சில் மூலம் மத்திய அரசு எடுத்து வருவதாகவும் கூறினார்.