அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்துள்ள நிலையில், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் இருக்கக்கூடிய அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வந்தது.அப்போது, அதிமுக தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரில் இருந்து ஓபிஎஸ் புகைப்படம் கிழிக்கப்பட்டுள்ளது. ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ் பேனர்களை கிழித்தெறிந்ததால் தலைமை அலுவலகத்தில் பரபரப்பான சூழல் நிலவுகிறது.மேலும்,அலுவலகத்திற்கு வெளியே ஈபிஎஸ் அதிமுக பொதுச்செயலாளராக வேண்டும் என தொண்டர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.இதனிடையே,அதிமுக […]