திருச்சி மாநகராட்சியின் 17 வது வார்டு கவுன்சிலர் பிரபாகரன் இல்லத்தில் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் MP என்ற தனியார் நிதி நிறுவனத்தின் மீதான பணமோசடி புகாரின் அடிப்படையில் திருச்சியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களிலும்,தமிழகம் முழுவதும் மொத்தமாக 50 இடங்களிலும் பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளின் சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. தனியார் நிதி நிறுவனம் மோசடியில் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில், நிறுவனத்தின் பூட்டை […]