தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளரை தேர்ந்தெடுக்க திமுக பொதுக்குழு கூடுகிறது என துரைமுருகன் அறிவிப்பு. அக்டோபர் 9ம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திமுகவின் 15-ஆவது பொதுத்தேர்தலில் புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் கூட்டம் அக்.9-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணிக்கு சென்னை, அமைந்தகரை, பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன் சென்டரில்” நடைபெறும். எனவே, அக்டோபர் […]
உச்சநீதிமன்றம் ஓபிஎஸ் மேல்முறையீடு மனு மீதான விசாரணை வரும் 30-ம் தேதி நடைபெறுகிறது. கடந்த ஜூலை 11ஆம் தேதி இபிஎஸ் தரப்பு நடத்திய பொதுக்குழுவில் இடைக்கால பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஓபிஎஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். இதனை எதிர்த்து முதலில் ஓபிஎஸ் தரப்பு உயர்நீதிமன்றத்தை நாடியது. அதில் ஒற்றை நீதிபதி தலைமை ஜூலை 11 பொதுக்குழு செல்லாது எனவும், அதனை எதிர்த்து இபிஎஸ் தரப்பு செய்த மேல்முறையீட்டில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு ஜூலை […]
அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், முழுமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் பொதுக்குழுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டம் தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக ராகுல்காந்தி வர வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில், முழுமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவரை தேர்ந்தெடுக்க மற்றும் அகில இந்திய […]
பொதுக்குழு முடிவுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணைய அதிகாரிகளை டெல்லியில் நேரில் சந்தித்து சிவி சண்முகம் வழங்கினார். அதிமுக பொதுக்குழு கூட்டம் நேற்றுமுன்தினம் நடைபெற்ற நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் பொருளாளர் பதவியில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்ட நிலையில்,திண்டுக்கல் சீனிவாசனை நியமனம் செய்வதாக இபிஎஸ் அறிவித்ததோடு, மொத்தம் 16 தீர்மானங்கள் பொதுக்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், கடந்த […]
பொதுக்குழு முடிவு தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்த அதிமுக. அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில்,பொதுச்செயலாளர் பதவியை உருவாக்க தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனையடுத்து, ஈபிஎஸ் அதிமுகவின் கோட்பாடுகள் மற்றும் கட்சி விதிகளுக்கு எதிராக செயல்பட்டதால் ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களான வைத்திலிங்கம்,மனோஜ் பாண்டியன், ஜெசிடி பிரபாகர் ஆகியோர் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கப்படுவதாக தெரிவித்தார். அதனை […]
அதிமுக செயற்குழு – பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ள நிலையில், ஓபிஎஸ் கலந்து கொள்ளவில்லை. சென்னை,வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடங்கியுள்ளது. பொதுக்குழு கூட்டத்திற்கு முன்னதாக தமிழ்மகன் உசேன் தலைமையில், செயற்குழு கூட்டம்நடைபெறுகிறது. அதிமுகவின் தற்போதைய நிலை குறித்த விவாதம் மற்றும் பொதுக்குழுவில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றுவது தொடர்பாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஓபிஎஸ்-க்கு இருக்கை ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் செயற்குழு – பொதுக்குழு கூட்டம் […]
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவு வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடைகோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீது உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது. இந்த விவகாரத்தில், ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் தரப்பில் வாதம் நடைபெற்றது. இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய வழக்கின் உத்தரவு வரும் திங்கட்கிழமை காலை 9 மணிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை, வானகரத்தில் அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள இடத்தில் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டார். […]
அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கின் விசாரணையை நாளை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு. அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதனிடையே,23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஆனால்,23 தீர்மானங்களும் பொதுக்குழுவில் நிராகரிப்பட்டது. அதன்பின்னர்,அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் […]
அண்ணன் ஓபிஎஸ்-ஐ பேச ஜெயகுமாருக்கு எந்த தகுதியும் இல்லை என ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ் எச்சரிக்கை. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது இந்த நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் […]
வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடைபெற்ற நிலையில்,23 தீர்மானங்களும் நிராகரிக்கப்பட்டது. பரபரப்பான சூழலில் இந்த பொதுக்குழு கூட்டம் நிறைவடைந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு கூட்டம் நடைபெறவுள்ளது இந்த நிலையில், வரும் 11ம் தேதி நடைபெறவுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க ஓபிஎஸ்-க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொருளாளர் என்ற அடிப்படையில் பங்கேற்க ஈபிஎஸ் […]
திட்டமிட்டு திரைக்கதை எழுதியது போல அதிமுக பொதுக்குழுவில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார் என அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் பேட்டி. அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில்,அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில்,அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ளது. அக்கூட்டத்தில்,ஒற்றைத் தலைமை தீர்மானம் குறித்து முடிவு எடுக்கப்படவுள்ளது. அதிமுக முன்னாள் செய்தித் தொடர்பாளர் மருது அழகுராஜ் […]
ஈபிஎஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது கட்சிப் பொறுப்பை அதிமுக தலைமை நிலையச் செயலாளர் என்று மாற்றியுள்ளார். கடந்த சில நாட்களாகவே அதிமுகவில் ஒற்றை தலைமை பிரச்சனை விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் மற்றும் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் என தனி தனியாக பிரிந்து ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். இதற்கிடையில், கடந்த சில தினங்களுக்கு முன் பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், அதிமுக பொதுக்குழு கூட்டம் பரபரப்பாக நடந்து முடிந்துள்ளது. இந்த நிலையில், வரும் 11-ஆம் தேதி பொதுக்குழு […]
ஜூலை 11-ஆம் தேதி கூடும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கும் கோரிக்கையை விசாரிக்க முடியாது என உயர்நீதிமன்றம் திட்டவட்டம். ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளரும் அ.தி.மு.க பொதுக்குழு உறுப்பினரான சண்முகம், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், ‘ கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகளை பொதுக்குழு மூலமாக நீக்க முடியாது. இவர்கள் இருவரும் சேர்ந்து விதிகளை திருத்தினால் மட்டுமே சாத்தியமாகும். கடந்த 23 ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் உயர் நீதிமன்ற […]
பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் அவமதிக்கப்பட்டார் என ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர் பேட்டி. சென்னை சேத்துப்பட்டில் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் ஜே.சி.டி. பிரபாகர், செயல்திட்டத்தில் இல்லாததை பொதுக்குழுவில் எழுப்பியது தவறு. சில தலைவர்களுக்கு கட்சியின் எதிர்காலம் குறித்து கவலையில்லை. பொதுக்குழு உறுப்பினர்கள் கண்ணியமாக நடத்தவில்லை. பொதுக்குழுவில் எங்களை கண்ணியமாக நடத்தினார்களா என்பதை நாடே அறியும். ஒற்றை தலைமை என ஏற்கனவே சொல்லி தந்ததை பொதுக்குழுவில் ஒப்பித்தனர். ஒற்றைத் தலைமை பற்றி பேச அனுமதித்தவர் எடப்பாடி பழனிசாமிதான் என்பதுபோல் […]
நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவு ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கருத்து. தஞ்சையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைத்திலிங்கம், அதிமுகவுக்கு கூட்டு தலைமை வேண்டும், கட்சியில் ஒன்றாக இருக்க வேண்டும், ஒற்றுமையுடன் இருந்து மீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும் என்றும் நாங்கள் இணைந்து செயல்படத்தான் விரும்புகிறோம் எனவும் தெரிவித்தார். அதிமுக பொதுக்குழுவில் சட்டத்துக்கு முரணாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்தோம். 23 தீர்மானங்களை தான் பொதுக்குழுவில் நிறைவேற்ற வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. […]
அதிமுக பொதுக்குழு கூட்டம் முடிந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் டெல்லி புறப்பட உள்ளதாக தகவல். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் அணியினர் இன்று இரவு டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் ஆணையம் மற்றும் உச்சநீதிமன்றத்தை அணுகுவது குறித்து ஆலோசித்து வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது. அதிமுக பொதுக்குழு கூட்டம் இன்று பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில், பரபரப்பாக நடந்து முடிந்துள்ள நிலையில், ஓபிஎஸ் அணியினர் டெல்லி புறப்பட உள்ளதாக தகவல் தெரிவிக்கப்படுகிறது. இதில், மனோஜ் பாண்டியன் மற்றும் ஓபிஎஸ் […]
ஒற்றை தலைமை கோரிக்கை கொண்டு வராவிட்டால் 23 தீர்மானங்களில் கையெழுத்திட மாட்டோம் ஈபிஎஸ் ஆதரவு திட்டவட்டம். சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய அதிமுக பொதுக்குழு கூட்டம் தாமதமாக தொடங்க உள்ளது. வழிநெடுகிலும் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் வரவேற்பு காரணமாக பொதுக்குழு கூடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில் நடைபெறும் பொதுக்குழு […]
பொதுக்குழு கூட்டத்தில் ஓபிஎஸ் முன்னிலையில் ஒற்றைத் தலைமை வேண்டும் என முழக்கமிட்டதால் பரபரப்பு. சென்னை வானகரத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளது. தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர். பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும், மூத்த நிர்வாகிகள் […]
ஒற்றை தலைமை வேண்டும் என்று பொதுக்குழுவில் கோரிக்கையை முன்வைப்போம் என்று செயற்குழு உறுப்பினர்கள் தகவல். அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி இன்று சென்னை வானகரத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர். தற்காலிக அவைத்தலைவர் தமிழ் உசேன் தலைமையில் பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் […]