பொங்கல் பரிசு தொகுப்பு தரம் குறைப்பாடு தொடர்பாக முதுநிலை அதிகாரியை சஸ்பெண்ட் செய்து தமிழக அரசு நடவடிக்கை. பொங்கல் தொகுப்பில் தரமற்ற பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் தமிழ்நாடு குடிமைப்பொருள் வழங்கல் முதுநிலை தரக் கட்டுப்பாட்டு மேலாளரை பணியிடைநீக்கம் செய்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நியாயவிலை கடைகளில் வழங்கப்பட்ட பொங்கல் சிறப்பு தொகுப்பில், சில இடங்களில் கொள்முதல் செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை உறுதி செய்வதில் […]
பொங்கல் பரிசு பொருட்கள் விநியோகத்தில் புகார்கள் எழ காரணமாக இருந்த அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என முதலமைச்சர் உத்தரவு. தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய சிறப்பு பரிசுத் தொகுப்பு ரூ.1,297 கோடி மதிப்பில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. இருப்பினும், இந்த பொங்கல் தொகுப்பு தரமற்றதாக வழங்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் சில வீடியோக்கள் வெளியிடப்பட்டு வந்தது. பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் செய்ததில் பல்வேறு புகார்கள் எழுந்து […]
குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது என்று அமைச்சர் விளக்கம். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சக்கரபாணி, திமுக ஆட்சியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு நேர்மையான முறையில் பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் பொய் பரப்புரை மக்கள் மன்றத்தில் தோற்கும். திமுக ஆட்சியில் வழங்கபட்டு வந்த பொங்கல் பரிசு தொகுப்பு அதிமுக ஆட்சியில் […]
தமிழக அரசின் 2022 ஆம் ஆண்டு பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் “இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டு இருப்பதற்கு ஓபிஎஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். சித்திரை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டு என்ற நடைமுறை, மரபு, கலாச்சாரம் தொடர்ந்திடவும்,பொங்கல் பரிசுப் பையின் முகப்பில் “தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துகள்” என்ற வாசகங்களை குறிப்பிட்டு தமிழ்நாட்டு மக்களின் நம்பிக்கைக்கு எதிராக உள்ளதை நிறுத்திடவும் முதல்வர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் […]