நாகையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேக்ளா ரேஸ் பந்தயம் கோலாகலம் . காணும் பொங்கலன்று நடைபெறும் இந்த பந்தயம் ஒருங்கிணைந்த தஞ்சை, நாகை, திருவாருர் மாவட்டங்கள் அளவில் நடைபெறுகிறது. திருக்கடையூரில் இருந்து 8 கிலோ மீட்டர் தூரம் நடைபெற்ற இந்த பந்தயம் மாடுகள் மற்றும் குதிரைகளில் மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. மாடுகள், குதிரைகள் மற்றும் வீரர்கள் மருத்துவ பரிசோதனைகளுக்கு பிறகு போட்டிகளில் பங்கேற்க அனுமதிகப்பட்டனர். காலையில் தொடங்கிய போட்டிகள் மாலை வரை நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற […]
கன்னியாகுமரியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். முக்கடல் சங்கமிக்கும் இடத்தில் குளித்து மகிழ்ந்த மக்கள் உற்சாகமாக காணும் பொங்கலை கொண்டாடினர். பகவதி அம்மன் கோவிலிலும் தரிசனம் செய்தனர். சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர்சிலைக்கு செல்ல காலை 6 மணி முதல் மாலை 5 மணிவரை இடைவிடாமல் படகுசேவை நடைபெறுகிறது. சபரிமலையில் மகரஜோதி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்களும் கன்னியாகுமரிக்கு வந்தனர். காணும்பொங்கலையொட்டி ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தை அடுத்த பவானிசாகர் அணைப்பூங்காவில் மக்கள் கூட்டம் […]