Tag: பேருந்து

பயணிகள் கவனத்திற்கு.. இனி சென்னை பேருந்துகளில் UPI மூலம் டிக்கெட்..!

UPI: இன்று சென்னை, கிண்டி, போக்குவரத்து ஆணையரகத்தில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் போக்குவரத்துத் துறை சார்பில் 20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 50 புதிய பேருந்துகள் இயக்கத்தை பொது மக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து தொடங்கி வைத்தார். READ MORE- கடலில் மூழ்கி உயிரிழந்த சிறுமிகள்.. நிதியுதவி அறிவித்த முதல்வர்..! மேலும், மாநகர் போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்துகளில் பாரத் ஸ்டேட் வங்கி உடன் இணைந்து […]

Udhayanidhi Stalin 4 Min Read
UPI

பேருந்து படிக்கட்டுகளில் பயணம் – போக்குவரத்து கழகம் புதிய நடவடிக்கை!

மாநகர் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளும் பள்ளி மாணவர்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில், பேருந்துகளை பாதுகாப்பாக இயக்கிட ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, படியில் தொங்கிகொண்டு பயணம் செய்வதை தடுக்கும் வகையில், முதற்கட்டமாக 200 பேருந்துகளுக்கு தானியங்கி கதவுகள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தகவல் தெரிவித்துள்ளார். மேலும், ஜன்னல் கம்பிகளை பிடித்து தொங்குவதை தவிர்க்க படிக்கட்டுகளின் […]

bus 4 Min Read
Transport Corporation

ஸ்ட்ரைக்கை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை தேவை – ஓபிஎஸ்

15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும், காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் நேற்று வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர். இன்றும் 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாகவும், பேருந்து நிலையங்கள் மற்றும் பணிமனைகளை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்போவதாகவும் அறிவித்துள்ளது. இதனால் பல்வேறு இடங்களில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளின் எண்ணிக்கை குறைந்ததால், பொதுமக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். இந்த […]

#OPanneerselvam 7 Min Read
ops

பேருந்து படிக்கட்டில் பயணித்த மாணவர் உயிரிழப்பு..!

நாமக்கல்லில் இருந்து திருச்சி சென்ற தனியார் பேருந்தில் படிக்கட்டில் நின்று பயணம் செய்த கல்லூரி மாணவர் உயிரிழந்தார். பேருந்தில் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில், நந்தகுமார் படிக்கட்டில் நின்று பயணம் செய்துள்ளார். இந்நிலையில், பேருந்து வளைவில் திரும்பியபோது அப்போது எதிர்பாராதவிதமாக மாணவர் நந்தகுமார் கீழே விழுந்தபோது, பேருந்தின் பின் சக்கரம் ஏறியதில் உயிரிழந்தார்.  

பேருந்து 1 Min Read
Default Image

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா, கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா…? நடிகர் கமல் காட்டம்…!

ஏழைகள் என்றால் கிள்ளுக்கீரையா, கேட்க நாதி இல்லை எனும் எண்ணமா என பேருந்திலிருந்து இறக்கிவிடப்பட்டவர்கள் குறித்து நடிகர் கமல் பேசியுள்ளார். கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பதாக செல்வம் எனும் மீன் விற்கும் தாய் பேருந்திலிருந்து கீழே இறக்கி விடப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், நேற்று அதே கன்னியாகுமரி மாவட்டத்தில் குறவர் குடும்பத்தை சேர்ந்த மூவர் பேருந்திலிருந்து, உடமைகளை தூக்கி எறிந்து வெளியே அனுப்பப்பட்டனர். இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து […]

actor kamal 4 Min Read
Default Image

மீண்டும் அதிர்ச்சி …. பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட குறவர் குடும்பம் …!

நாகர் கோவிலில் குறவர் குடும்பத்தினரின் உடமைகளை வெளியில் போட்டு, பேருந்திலிருந்து இறக்கி விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த செல்வம் எனும் மீன் விற்கும் தாயாரை கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக பேருந்தில் இருந்து இறக்கி விட்ட சம்பவம் பெருமளவில் பேசப்பட்டது. தாயார் தனது மனக்குமுறலை பேருந்து நிலையத்தில் கதறலாக கூறிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகிய நிலையில் முதல்வர் உள்ளிட்ட பலர் இதற்கு கண்டனம் தெரிவித்து இருந்தனர். மேலும் இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பேருந்து […]

bus 4 Min Read
Default Image

இன்று முதல்வர் 12 சிறிய பேருந்துகளை தொடக்கி வைக்கிறார் ….!

இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 12 சிறிய பேருந்துகளை தொடக்கி வைக்க உள்ளார்.  சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் உள்ள 210 சிறிய பேருந்துகளில் 66 சிறிய பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டு வருவதாகவும், சென்னையில் குறைந்த அளவில் சிறிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், கூடுதலாக சிறிய பேருந்துகளை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி தற்போது சென்னையில் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சிறிய பேருந்துகளில் முதல்கட்டமாக 12 பேருந்துகளை மெட்ரோ பயணிகளின் வசதிக்காக […]

CMStalin 2 Min Read
Default Image

பயணிகள் கவனத்திற்கு..! இனிமேல் பேருந்துகளில் இப்படி செய்தால், பேருந்தில் இருந்து இறக்கி விடப்படுவீர்கள் – உயர்நீதிமன்றம் அதிரடி

பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அறிவுறுத்தலை மீறி, பேருந்துகளில் தங்களது  மொபைலில் பாட்டு கேட்பவர்களை தாராளமாக கீழே இறக்கி விடலாம்.  கர்நாடகா : பொதுவாகவே பயணிகள் பேருந்தில் பயணிக்கும் போது பேருந்துகளில் பாடலை இயக்குவது வழக்கம். ஆனால் சில சமயங்களில் பேருந்துகளில் பாடல்கள் இயக்கப்படாத போது, சிலர் பொழுதுபோக்கிற்காக தங்களது மொபைலில் பாடல்களை போட்டு கேட்டுக்கொண்டு வருவதுண்டு. ஆனால், இந்த செயல் அருகில் இருப்பவர்களை எரிச்சலடைய செய்கிறது. அவ்வாறு தொந்தரவுக்கு உள்ளான நபர் ஒருவர்,  கர்நாடக மாநில […]

- 3 Min Read
Default Image

அடேங்கப்பா..!தீபாவளியை முன்னிட்டு எத்தனை பேர் வெளியூர் பயணம்?,எவ்வளவு வசூல் தெரியுமா? – அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல்!

சென்னை:தீபாவளியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 1 இலட்சத்து 57 ஆயிரம் பயணிகள் முன்பதிவு செய்து பயணம் செய்துள்ளதாகவும், இதன் வாயிலாக மொத்தமாக 8 கோடியே 37 இலட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாகவும் போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தகவல். தீபாவளித் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில், மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பேருந்துகள் வாயிலாக, 14,24,649 பயணிகள் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: […]

Deepavali 9 Min Read
Default Image

பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டுயானை..!பயணிகளின் திக் திக் நிமிடங்கள்..!வீடியோ

கோத்தகிரி-மேட்டுப்பாளையம் சாலையில் அரசு பேருந்து கண்ணாடியை உடைத்த காட்டு யானையின் வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் அரசு பேருந்து ஒன்று கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்துள்ளது. அப்போது மேல்தட்டப்பள்ளம் என்ற இடத்தில் காட்டு யானை ஒன்று அரசு பேருந்தை வழிமறித்துள்ளது. இதனால் செய்வதறியாது, ஓட்டுநர் பேருந்தை பின்னோக்கி இயக்கியுள்ளார். இதன் பின்னர் பேருந்தை நோக்கி காட்டு யானையும் வேகமாக துரத்தி வந்துள்ளது. துரத்தி வந்த காட்டு யானை பேருந்தின் முன்பக்க கண்ணாடியை […]

bus 3 Min Read
Default Image

மாணவர்கள் பேருந்துகளில் இன்று முதல் கட்டணமின்றி பயணிக்கலாம்..!

இன்று முதல் பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை இலவசமாக பயணிக்கலாம் . தமிழகத்தில் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பள்ளி மாணவர்களுக்கு இலவசமாக பயண அட்டை வழங்கப்படும் வரை பள்ளி சீருடை அணிந்து பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம். பள்ளி, கல்லூரிகளில் வழங்கப்படும் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் இலவசமாக பயணிக்கலாம் என போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிவித்துள்ளார். இதுகுறித்து வெளியாகியுள்ள […]

#TNGovt 5 Min Read
Default Image

ஓடிய பேருந்தில் இருந்து உருண்டோடிய சக்கரம்…! நூலிழையில் உயிர்பிழைத்த பயணிகள்..!

சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்த போது, சக்கரம் கழன்று ஓடியுள்ளது.  சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில் சாலையில் அரசு பேருந்து ஒன்று சென்றுக் கொண்டிருந்துள்ளது. அப்போது பேருந்தின் முன்பக்க சக்கரம் திடீரென, கழன்று தனியாக உருண்டோடியுள்ளது. இதனையடுத்து, சக்கரம் கழன்று ஓடியதை அறிந்த ஓட்டுநர் உடனடியாக பேருந்தை நிறுத்தியுள்ளார். இதனால், நல்வாய்ப்பாக எந்த ஒரு சேதமும் ஏற்படவில்லை. பயணிகளும் உயிர்தப்பினர். ஆனால், உருண்டோடிய சக்கரத்தால், சாலையோரம் நின்றுகொண்டிருந்த இருசக்கர வாகனங்கள் சேதமடைந்துள்ளன.

bus 2 Min Read
Default Image

உத்தரகண்ட் நிலச்சரிவிலிருந்து தப்பிய பேருந்து..!

உத்தரகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவிலிருந்து பேருந்து ஒன்று அதிர்ஷ்டவசமாக தப்பியுள்ளது. நேற்று உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள வடகிழக்கு பகுதியான நைனிடாலிலிருந்து பேருந்து ஒன்று புறப்பட்டுள்ளது. அப்போது 14 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து மலைப்பாங்கான பகுதி வழியாக சென்றுள்ளது. சற்றும் எதிர்பாராத விதமாக அங்கே நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் பாறைகள் உருண்டோடியது. இந்த சம்பவத்தை தொலைவிலேயே கண்ட ஓட்டுநர் பேருந்தை நிலச்சரிவிற்கு தொலைவில் நிறுத்தியுள்ளார். இருந்தபோதிலும் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவை பார்த்து பயந்த பயணிகள் அனைவரும் […]

bus 3 Min Read
Default Image

பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது !

பேருந்துகளின் கட்டணம் இரு மடங்காக உயர்கிறது என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்க தலைவர் அறிவிப்பு. நாளுக்கு நாள் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருவதால் தற்போது 3ம் கட்ட ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த ஊரடங்கும் வருகின்ற 17ம் தேதியுடன் முடிகிறது. அதன்பின் 4ம் கட்ட ஊரடங்கும் அமலுக்கு வரும், ஆனால் இது முற்றிலும் மாறுப்பட்டதாக இருக்கும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். அமலில் உள்ள 3ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தொழில்களுக்கு கட்டுப்பாடுகளுடன் அனுமதி […]

bus cost 3 Min Read
Default Image