விதிகளை பின்பற்றாமல் பேனர் வைக்க அனுமதிக்கக்கூடாது என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரத்தில் பேனர் வைப்பதற்காக சென்ற போது, 12 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். இந்த விவகாரம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில், ஒரு வழக்கு தொடரப்பட்டது. மேலும், விதிமுறைகளை மீறி பேனர்களை வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனு தாரராக சேர்க்கப்பட்டிருந்த திமுக தரப்பில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் […]
உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வையுங்கள் என முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். விழுப்புரம் மாம்பழப்பட்டு சாலையில் உள்ள திருமண மண்டபத்தில், நெடுஞ்சாலைத் துறையில் பணியாற்றும் பொன் குமார் என்பவரது திருமண விழா நடைபெற்றது. இந்த திருமண விழாவில் கலந்து கொள்வதற்காக தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி வருகை தந்துள்ளார். அவரை வரவேற்க திமுக சார்பில் விழுப்புரம் நான்கு முனை சந்திப்பில் இருந்து திமுக கட்சி கொடிகள், அலங்கார தோரணங்கள் நடவு செய்யும் […]
எனது பிறந்தநாளன்று யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்கள் வரும் 25-ம் தேதி பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், பிறந்தநாளன்று யாரும் தன்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி அன்று எனது பிறந்த நாளை முன்னிட்டு, கழகத் தோழர்கள், நிர்வாகிகள் மற்றும் தோழமைக் கட்சி நண்பர்கள் உள்பட யாரும் என்னை நேரில் சந்திக்க வரவேண்டாம் என்று […]