கடந்த ஆட்சியில் கொண்டுவந்த பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் 2014-15-ம் நிதியாண்டில் ‘பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம்’ என்ற புதிய முறையை கொண்டுவந்தனர். அதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சம் ரூபாயிலும், கோடி ரூபாய்களிலும் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு, ஒரே டெண்டராக பெரிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டது. இதனால் ஒரு சில ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே ஆதாயம் பெற்றன. சிறிய ஒப்பந்ததாரர்கள் வருவாய் இழப்பிற்கு ஆளாகினர். திமுக […]