பெரு நாட்டு மக்கள் போராட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்புகளை மேற்கோள் காட்டி, அமைச்சர்கள் பாட்ரிசியா கோரியா மற்றும் ஜெய்ர் பெரெஸ் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். பெரு நாட்டில் கடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ வெற்றிபெற்று கடந்த 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார். பெரு ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோ, நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக அறிவித்ததை தொடர்ந்து, நாடாளுமன்ற எம்.பிக்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து, அவருக்கு எதிராக […]
பெரு நாட்டில் கடந்த தேர்தலில் இடதுசாரி ஆதரவாளரான பெட்ரோ காஸ்டிலோ வெற்றிபெற்று கடந்த 2021 ஜூலை மாதம் பெரு நாட்டின் ஜனாதிபதியாக தெரிந்தெடுக்கப்பட்டார். அதன்பிறகு , அண்மையில், நாடாளுமன்றத்தை கலைத்து , புதிய அரசை நியமிக்கப்போவதாக அறிவித்தார். இதனால் அவசர நிலையை அமல்படுத்தினார். இதற்கு நாடாளுமன்ற எம்.பிக்கள் எதிர்ப்பு தெரிவித்து, ஜனாதிபதி பெட்ரோ காஸ்டிலோவுக்கு எதிராக வாக்களித்து அவரை பதவி நீக்கம் செய்தனர். மேலும் மக்களை கிளர்ச்சி செய்ய தூண்டியதாக கூறி கைது செய்தனர். இதனை தொடர்ந்து […]
5 ஆண்டுகள் நீண்ட போராட்டத்திற்கு பின் கருணை கொலைக்கான நீதிமன்ற அனுமதியை பெற்ற மனநல மருத்துவர். பெருநாட்டை சேர்ந்த எஸ்ட்ராடா என்ற மனநல மருத்துவர் கடந்த 30 ஆண்டுகளாக பாலிமையோசிடிஸ் என்ற தீராத நோயினால் அவதிப்பட்டு வந்துள்ளார். செயற்கை சுவாசம் பொருத்தப்பட்ட நிலையில்,சக்கர நாற்காலியில் அமர்ந்த வண்ணம் தான் வாழ்ந்து வந்துள்ளார். இவர் உச்சநீதிமன்றத்தில் தனது உயிரை மாய்த்துக் கொள்வதற்காக கருணை கொலைக்கு அனுமதி கோரி நாடி இருந்தார். 5 ஆண்டுகளாக அனுமதி கோரி நீதிமன்றத்தை நாடி […]
பெரு நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. பெரு நாட்டில் வடக்கு பகுதியில் இன்று அதிகாலை 5.22 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.5 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருந்துள்ளது என்ற போதிலும் 112 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கத்தின் மையம் அமைந்துள்ளதால் பெரிய […]
பெரு நாட்டில் இரண்டு படகுகள் மோதி 11 பேர் உயிரிழந்துள்ளனர். பெரு நாட்டில் உள்ள ஹல்லகா ஆற்றில் படகு விபத்து ஏற்பட்டுள்ளது. நேற்று சாண்டா மரியாவிலிருந்து யுரிமைகஸ் என்ற பகுதிக்கு படகு மூலம் ஹல்லகா ஆற்றில் 80 பேர் பயணித்துள்ளனர். அந்த சமயத்தில் ஆற்றில் மோட்டார் படகு ஒன்று சென்றுள்ளது. அப்போது மோட்டார் படகு இந்த படகின் மேல் மோதியதில் 11 பேர் பலியாகியுள்ளனர். இந்த விபத்து குறித்து தெரிவிக்கப்பட்டதுடன் அந்நாட்டின் மீட்பு படை மற்றும் பாதுகாப்பு […]
பெரு நாட்டில் சுரங்கத்தொழிலாளர்கள் பேருந்து விபத்தில் சிக்கி 15 பேர் உயிரிழந்துள்ளனர். தென் அமெரிக்க நாடுகளில் ஒன்று பெரு. இந்நாட்டில் உள்ள அப்ருனிமெக் மாகாணத்தில் காப்பர் சுரங்கம் அமைந்துள்ளது. ஹடபம்பாஸ் நகரில் அமைந்துள்ள இந்த சுரங்கத்திலிருந்து வழக்கம்போல் வேலை முடிந்தவுடன் 18 பணியாளர்களை ஏற்றி கொண்டு அந்த நிறுவனத்தின் பேருந்து சென்றுள்ளது. அப்பொழுது மலைப்பாங்கான பகுதி வழியாக பேருந்து சென்றுள்ளது. அச்சமயத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து திடீரென 200 மீட்டர் பள்ளத்தில் கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் […]