முதல்முறையாக முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் காவலர் ஒருவர் சேர்ப்பு. தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாதுகாப்பு பிரிவில் முதல்முறையாக பெண் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளர். 250-க்கும் மேற்பட்ட ஆண் காவலர்கள் சுழற்சி முறையில் முதலமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் நிலையில்,தற்போது அதில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்டுள்ளார். இதனையடுத்து,முதலமைச்சரின் பாதுகாப்பு பிரிவில் பெண் தலைமைக் காவலர் ஒருவர் சேர்க்கப்பட்ட நிலையில்,மேலும் சில பெண் காவலர்களை சேர்க்க பயிற்சிகள் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் இனி பெண் காவலர்கள் 12 மணி நேரத்திற்கு பதிலாக 8 மணி நேரம் மட்டும் பணியில் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவின் பெண் காவலர்களுக்கு நற் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. பெண் காவலர்களின் பணி நேரத்தை அரசு குறைத்துள்ளது. மகாராஷ்டிர மாநில டிஜிபி சஞ்சய் பாண்டே பிறப்பித்த உத்தரவின்படி, பெண் காவலர்கள் இனி 12 மணி நேரத்திற்குப் பதிலாக எட்டு மணி நேரம் வேலை செய்ய வேண்டும். பெண் காவலர்களுக்கான புதிய குறுகிய […]