பெண் குழந்தைகள் பாதுகாப்பு தினத்தை கொண்டாட என்ன தகுதி இருக்கிறது என்று மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விமர்சித்துள்ளார். மதுரை ஒத்தக்கடையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மு.க ஸ்டாலின் முன்னிலையில் அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர் ராஜ கண்ணப்பன் உள்ளிட்ட பலர் திமுகவில் இணைந்தனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின் தமிழகத்தின் நிதி நிலைமையோ கோமா நிலையில் சென்று கொண்டிருக்கிறது. திமுக ஆட்சியில் ரூ.1 லட்சம் கோடியாக இருந்த தமிழகத்தின் கடன் கடந்த 3 ஆண்டில் […]