பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும்,டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார்.மேலும், மத்திய அரசைப் பின்பற்றி,அனைத்து மாநில அரசுகளும் குறிப்பாக கடந்த நவம்பரில் மத்திய அரசு கலால் வரியைக் குறைத்தபோது,உள்ளூர் வரியைக் குறைக்காத மாநிலங்களும் வரியை குறைக்க வேண்டும் என அறிவுறுத்தியிருந்தார். பிடிஆர் பதிலடி: இதனையடுத்து,இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
பெட்ரோல் மீதான மத்திய கலால் வரியை லிட்டருக்கு 8 ரூபாயும், டீசல் மீதான வரியை லிட்டருக்கு 6 ரூபாயும் குறைப்பதாகவும்,இதனால் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.9.5-ம், டீசல் விலை லிட்டருக்கு ரூ.7-ம் குறையும் என்றும்,அனைத்து மாநில அரசுகளும் இதனை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தெரிவித்திருந்தார். அந்த வகையில்,தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.8.22-ம்,டீசல் லிட்டருக்கு ரூ.6.70-ம் குறைக்கப்பட்டுள்ளது.இதனால்,இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும்,டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24-க்கும் விற்பனை […]
தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் தனியார் வங்கிகள் மூலம் வழங்கப்பட்ட நகைக்கடன் தள்ளுபடி பற்றிய எந்த விவரமும் தமிழக அரசின் அரசாணையில் இல்லை என்று இபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். பருவ மழையால் பாதிக்கப்பட்டுள்ள வேளாண் பெருமக்களுக்கு உரிய நிவாரணம் வழங்கிடவும்,நகைக்கடன் தள்ளுபடி, பெட்ரோல், டீசல் விலை குறைப்பையும் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு திமுக அரசு நிறைவேற்றிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.மேலும்,இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: “கடனிலே பிறந்து, கடனிலே […]