பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும். அண்டைநாடுகளில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், இந்தியாவில் கொரோனவுக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கொரோனா முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் தொடங்கி உள்ளன. அதன்படி, பெங்களூரு விமான நிலையத்திற்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு இன்று முதல் கொரோனா பரிசோதனைக்கான வெப்பநிலை […]
அரசு சொகுசு பேருந்து ஒன்று பெங்களூருவில் இருந்து வருகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து விபத்து ஏற்பட்டுள்ளது. பெங்களூரில் இருந்து அரசு பேருந்து வருகையில்,திருச்சி – சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வளைவில் திரும்புகையில் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் நல்லவேளையாக உயிர்ச்சேதம் எதுவும் இதுவரை பதிவாகவில்லை. பேருந்தில் பயணித்த 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கன்னட கொடிக்கு தீ வைத்த 30 வயது நபர் கைது செய்யப்பட்டார். பெங்களூரூ, பரங்கி பாளையத்தில் கன்னட கொடிக்குத் தீ வைத்த நபர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட இந்த நபர் வட இந்தியாவைச் சேர்ந்த அமிர்தேஷ் என போலீசார் கண்டறிந்திருந்தனர். அமிர்தேஷ் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 10 மணிக்கு கன்னட கோடிக்கு தீ வைத்து எரித்ததை பார்த்த மக்கள் அவரை தடுத்து எரிந்து கொண்டிருக்கும் தீயை அணைத்தனர். பின்னர் தகவல் அறிந்து […]
பெங்களூருவில் ஒரு தொலைதூர கல்வி நிலையத்தில் போலியாக முதுகலை, பிஎச்டி சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது சோதனையில் கண்டறியப்பட்டுள்ளது. போலி சான்றிதழ் , போலி பட்டம் என்று உலா வந்து, தற்போது புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களின் பெயர்களில் முதுகலை பட்டம், பி. எச்டி பட்டம் வரையில் வந்துவிட்டது. அதுவும் தொலைதூர கல்வி வழங்கும் ஒரு கல்வி நிலையத்தில் தான் இந்த மோசடிகள் அரங்கேறியுள்ளன. அங்கு அண்மையில் அரசு அதிகாரிகள் நடத்திய சோதனையில் 1000 போலி சான்றிதழ்கள், முத்திரைகள் ஆகியவை கண்டறியப்பட்டன. […]
போதைப்பொருட்களுக்கு எதிரான சோதனையின் போது பெங்களூருவில் 27 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் பல்வேறு விதமான போதை வஸ்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்தியாவில் போதைப்பொருள் கலாச்சாரம் சற்று அதிகரித்து வருவதை காண முடிகிறது. அதற்கு சாட்சியாக முன்பில்லாத அளவுக்கு பல்வேறு இடங்களில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தி போதைப்பொருள்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தும் வருகின்றனர். இந்த போதை வஸ்துக்களை பயன்படுத்துவது பெரும்பாலும் படிக்கும் மாணவர்களும், படித்த இளைஞர்களும் என்பது வேதனைக்குரிய செய்தியாகும். அப்படித்தான் […]
பெங்களூருவில் ஒரு பெண்ணுடன் உடலுறவில் ஈடுபட்ட போது 67 வயதான தொழிலதிபர் உயிரிழந்துள்ளார். அவரது உடலை அந்த பெண், தனது கணவர் மற்றும் சகோதரன் உதவியுடன் அப்புறப்படுத்தியுள்ளார். பெங்களூருவை சேர்ந்த 67 வயதான பாலசுப்ரமணியம் எனும் தொழிலதிபர் தன்னுடைய வீட்டில் வெளியில் செல்வதாக கூறிவிட்டு, ஒரு பெண்ணுடன் ஒரு வீட்டில் உல்லாசமாக இருந்துள்ளார். அந்த சமயம் பாலசுப்ரமணியத்திற்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக தெரிகிறது. இதனை அடுத்து பதறிய அந்த பெண், உயிரிழந்த பாலசுப்ரமணியன் உடலை போலீசுக்கு பயந்து […]
பெங்களூரு யெலஹங்காவில் குழந்தை திருமணம் செய்த குற்றச்சாட்டின் பேரில் 46 வயது ஆண் மற்றும் 14 வயது சிறுமியின் பெற்றோரை கைது செய்துள்ளதாக கர்நாடக போலீசார் இன்று தெரிவித்தனர். பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்திய சிறுமி, குழந்தைகள் நலக் குழுவின் காவலுக்கு அனுப்பப்பட்டு, தற்போது பெங்களூரு வில்சன் கார்டனில் உள்ள பெண்களுக்கான அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். சிறுமியை ‘திருமணம்’ செய்தவர் சிக்கபெத்தஹள்ளியைச் சேர்ந்த நில உரிமையாளர் என்.குருபிரசாத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் தினக்கூலி […]
பெங்களூருவில் ஜி.சி.பி எந்திரத்தில் வேலைக்கு சென்ற ஐடி ஊழியர்களை டிவிட்டரில் பாராட்டிய ஆனந்த் மஹிந்திரா. அதற்கு பதிலடி கொடுத்துள்ளார் சமூக ஆர்வலர். கர்நாடக தலைநகர் பெங்களூருவில், இதுவரை வரலாறு காணாத கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதில், நேற்று மட்டுமே 130 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் பெங்களூரு நகரமே வெள்ளக்காடாய் இருக்கிறது. நகரத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளநீரால் சூழப்பட்டுள்ளன. அதனால், மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பலர் டிராக்டர், ஜே.சி.பி போன்றவைகளை பயன்படுத்தி தாங்கள் […]
பெங்களூரில் இரவு முழுவதும் பெய்த மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் சில பகுதிகளில் படகுகள் மற்றும் டிராக்டர்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டபோது, சாலைகளில் தண்ணீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழையை அடுத்து, பெங்களூரில் உள்ள பல நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்கள் இன்று தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்யும்படி கேட்டுக் கொண்டன. ஸ்விக்கி மற்றும் முதலீட்டு வங்கியான கோல்ட்மேன் சாக்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யுமாறு கூறியுள்ளன. “பருவமழை தொடர்ந்து நகரின் […]
BWSSB பம்பிங் ஸ்டேஷன் நீரில் மூழ்கியதால் பெங்களூருக்கு குடிநீர் விநியோகம் 2 நாட்களுக்கு நிறுத்தப்படும். கனமழை காரணமாக கர்நாடகாவின் மாண்டியா மாவட்டத்தில் உள்ள பெங்களூரு நீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரிய (BWSSB) நீரேற்று நிலையம் நீரில் மூழ்கியது. அதனால் காவிரி ஆற்றில் இருந்து பெங்களூருவுக்கு குடிநீர் விநியோகம் இரண்டு நாட்களுக்கு பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் கன மழைக்குப் பிறகு சாலைகளில் தண்ணீர் தேங்கி இருப்பதால் போக்குவரத்து நெரிசல் மற்றும் தெருக்களில் படகுகள் மூலம் […]
கடந்த ஆகஸ்ட் 30ம் தேதி பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், அவுட்டர் ரிங் ரோடு (ஓஆர்ஆர்) பகுதியில் உள்ள ஐடி நிறுவனங்கள் மற்றும் வங்கி நிறுவனங்களுக்கு ₹225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாக, அவுட்டர் ரிங் ரோடு கம்பெனிகள் சங்கம் (ஓஆர்ஆர்சிஏ) தெரிவித்துள்ளது. ஓஆர்ஆர் இல் உள்ள IT நிறுவனங்கள் ஒவ்வொரு ஆண்டும் $22 பில்லியன் வருவாய் ஈட்டுகின்றன, இது பெங்களூரின் மொத்த IT வருவாயில் 32% ஆகும். ஓஆர்ஆர் இல் உள்ள மோசமான உள்கட்டமைப்பு, இங்கு அமைந்துள்ள […]
பெங்களூரு ஏரிகளில் உள்ள தண்ணீர் குடிப்பதற்குத் தகுதியற்றது-KSPCB அறிக்கை. கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் (KSPCB) நீர் தர பகுப்பாய்வு அறிக்கையின்படி, பெங்களூருவில் உள்ள 105 ஏரிகளில், ஒரு ஏரி கூட குடிநீர் ஆதாரமாக இல்லை. ஏரிகள் மாசுபடுவதற்கு முக்கிய காரணம், பெங்களுருவில் உற்பத்தியாகும் கழிவுகளில் 80 சதவீத கழிவுநீர் மற்றும் 20 சதவீத தொழிற்சாலை கழிவுகள் ஏரிகளில் கலப்பதால் தான் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் கழிவு நீரை எடுத்துச் செல்லும் வடிகால் […]
பெங்களூரில் இருந்து மாலே (மாலத்தீவு) நோக்கி 92 பயணிகளுடன் சென்ற கோ பர்ஸ்ட் விமானம், புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, இன்ஜின் அதிக வெப்பம் குறித்து எச்சரிக்கை மணி அடித்ததை அடுத்து, கோவை விமான நிலையத்தில் இன்று மதியம் 12 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. கோயம்புத்தூர் வான்வெளியைக் கடக்கும்போது ஜி843 விமான பைலட் ‘மேடே’ அழைப்பு விடுத்ததால் கொச்சின் இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் (சியால்) ஏடிசி இந்த அருகிலுள்ள விமான நிலையமான கோயம்புத்தூருக்கு விமானத்தை இயக்கிய […]
கோவிட்-19 அதிகரித்து வருவதை எடுத்துரைத்த கர்நாடக சுகாதார அமைச்சர் கே சுதாகர், 17 சதவீத மக்கள் மட்டுமே பூஸ்டர் ஷாட்களை எடுத்துள்ளனர் என்றும், மக்கள் பூஸ்டர் ஷாட் பெறுமாறு அனைவரையும் வலியுறுத்தினார். கோவிட்-19 தொழில்நுட்ப ஆலோசனைக் குழுவை (டிஏசி) சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒட்டுமொத்த தேசத்திலும் கோவிட்-19 ஒரு உயர்வைக் காண்கிறது. கர்நாடகத்தின் கோவிட்-19 வழக்குகள் தற்போது 7.2 சதவீத அதிகமாக உள்ளது. பெங்களூரு, ஷிவமொக்கா, பாகல்கோட், பெல்லாரி போன்ற நகரங்களில் உள்ள மாநில […]
அடுத்த மூன்று ஆண்டுகளில் இந்தியாவில் 26 புதிய பசுமை விரைவுச் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அதில் பெங்களூரு-சென்னை விரைவுச் சாலையும் ஒன்று என்று நிதின் கட்கரி ராஜ்யசபாவில் தெரிவித்தார். இந்த விரைவுச் சாலை அமைக்கப்பட்டால், சென்னையில் இருந்து பெங்களூருக்கு இரண்டு மணி நேரத்தில் பயணிக்க முடியும் என்றும் அவர் கூறினார். விரைவுச் சாலை கர்நாடகாவில் உள்ள ஹோஸ்கோட் நகரில் தொடங்கி, சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் முடிவடையும். இந்த அதிவேக […]
தெற்கு பெங்களூரு ராஜராஜேஸ்வரிநகரில் உள்ள ஐடியல் டவுன்ஷிப்பில் உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு திங்கள்கிழமை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்ததும் காவல்துறைக்கு எச்சரிக்கை செய்யப்பட்டது. அரை மணி நேரத்திற்குள், தடுப்பு நடவடிக்கையாக 1,500 க்கும் மேற்பட்ட மாணவர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். இதுகுறித்து மேற்கு பெங்களூரு டிசிபி லக்ஷ்மன் பி நிம்பர்கி கூறுகையில், “மாணவர்களை பள்ளி வளாகத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வெடிகுண்டு செயலிழக்கும் படை மற்றும் மோப்ப நாய் படை பள்ளி வளாகத்தில் சோதனை […]
ஐரோப்பியப் புலனாய்வுப் பிரிவு(EUI) சமீபத்தில் வாழ்வாதாரக் குறியீடு பட்டியல் 2022ஐ வெளியிட்டது. இதில் 173 நகரங்கள் அவற்றின் வாழ்வாதாரம் அல்லது வாழ்க்கை நிலைமைகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தப்பட்டுள்ளது. நிலைத்தன்மை, சுகாதாரம், கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல், கல்வி மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய ஐந்தையும் அடிப்படையாகக்கொண்டு இந்த வாழ்வாதார குறியீடு 2022 உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் 100க்கு 54.4 மதிப்பெண்களுடன் பெங்களூரு 146வது இடத்தைப் பிடித்துள்ளது.இதில் டெல்லி, மும்பை,சென்னை மற்றும் அகமதாபாத் ஆகிய நான்கு இந்திய நகரங்களும் மோசமான மதிப்புகளை பெற்று […]
பெங்களூருவில் ஆபாசப் படங்களுக்கு அடிமையான 40 வயதான ஆட்டோ டிரைவர் ஒருவர் தனது மனைவி ஆபாச படத்தில் நடித்ததாக நினைத்துக் கொண்டு,குழந்தைகள் முன்னிலையில் அவரை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவை சேர்ந்த ஆட்டோ டிரைவரான பாஷா மற்றும் முனீபா தம்பதிக்கு திருமணமாகி 15 ஆண்டுகள் ஆகிறது. அவர்களுக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில்,குற்றம் சாட்டப்பட்ட ஜஹீர் பாஷா,இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு ஆபாசப் படத்தைப் பார்த்து, அதில் அவரது மனைவி முபீனா (35) இருந்ததாக சந்தேகிக்கத் தொடங்கினார். […]
பெங்களூரு:சாமராஜ்பேட்டை வால்மீகி நகரில் நிதித் தகராறில் தொழிலதிபர் ஒருவர் தனது 25 வயது மகனை தீ வைத்து எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த தொழிலதிபர் சுரேந்திரா என்பவர் பெங்களூரு சாம்ராஜ்பேட்டை,ஆசாத் நகர் பகுதியில் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார்.அவருக்கு அர்பித் (25) என்ற மகன் இருந்துள்ளார்.தொழிலதிபர் சுரேந்திரா கட்டிடங்களை வடிவமைக்கும் தொழில் செய்து வந்த நிலையில்,தனது தொழிலை மகன் அர்பித்திடம் ஒப்படைத்தார். ஆனால்,அர்பித் தொழிலில் நஷ்டம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. குறிப்பாக,ரூ.1½ கோடி பணத்திற்கான […]
பெங்களூருவில் உள்ள கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள் உள்ளிட்ட 301 மத வழிபாட்டுத் தலங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், கர்நாடக மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின்படி ஒலி அளவு குறித்த விதிகளை கடைபிடிக்குமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக நகர போலீஸ் கமிஷனர் கமல் பந்த் தெரிவித்தார். இந்நிலையில் மசூதிகளில் ஆசானுக்கு ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்துவது தொடர்பான சர்ச்சைக்கு மத்தியில், நீதிமன்றத்தின் ஒலி மாசுபாட்டை மீறியதாகக் கூறப்படும் வழிபாட்டுத் தலங்களில் இருந்து ஒலிபெருக்கிகளை பெங்களூரு போலீஸார் கைப்பற்றத் தொடங்கியுள்ளனர்.