இஸ்ரேலின் என்எஸ்ஓ(NSO) என்ற தொழில்நுட்ப நிறுவனம் உருவாக்கிய பெகாசஸ் ஸ்பைவேர் விவகாரம் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் கடந்த ஆண்டு மிகப் பெரிய அளவில் சர்ச்சையைக் கிளப்பியிருந்தது. குறிப்பாக,இந்த ஸ்பைவேர்,மொபைல் போன்கள் அல்லது பிற சாதனங்களுக்குள் ஊடுருவி உரிமையாளரின் அனுமதி இல்லாமல் தரவுகளை சேகரித்து உளவு பார்க்க முடியும் என்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,ஸ்பெயினின் பிரதமர் மற்றும் பாதுகாப்பு அமைச்சரின் தொலைபேசிகள் பெகாசஸ் ஸ்பைவேரால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஸ்பெயின் அரசு தெரிவித்துள்ளது. அதன்படி,பிரதமர் பெட்ரோ சான்செஸின் மொபைல் […]
பெகாசஸ் உளவு விவகாரத்தில் தேசத்துரோகக் குற்றமிழைத்த மோடி பிரதமர் பதவியிலிருந்து விலக வேண்டும் என தொல்.திருமாவளவன் எம்.பி அறிக்கை. இதுதொடர்பாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்ரேல் நாட்டிடமிருந்து பெகாசஸ் உளவுச் செயலியை மோடி அரசு வாங்கியது உண்மை என்பதை ‘நியு யார்க் டைம்ஸ்’ நாளேடு ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தியுள்ளது. உளவுச் செயலியை வாங்கவில்லை என்று நாடாளுமன்றத்திலும், உச்சநீதிமன்றத்திலும் பொய்யுரைத்த மோடி அரசு தேசத்துரோகக் குற்றம் இழைத்துள்ளது. இதற்குப் பொறுப்பேற்று பிரதமர் பதவியிலிருந்து […]
பெகாசஸ் மென்பொருள் மூலம் உளவு பார்க்கப்பட புகாரில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் மென்பொருள் மூலம் ஒட்டுக்கேட்பு விவகாரத்தில் தொழிநுட்ப வல்லுநர்களைக் கொண்ட விசாரணைக் குழு அமைப்பது தொடர்பாகத் தொடரப்பட்ட மனுக்கள் மீது இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்குவதாக கூறப்பட்டது. அதன்படி, பெகாசஸ் தொடர்பாகத் தொடரப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் வந்தபோது, பெகாசஸ் ஒட்டுக்கேட்பு வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பில் […]
ஆப்பிள்(APPLE) நிறுவனம் தனது சாதனங்களில் ஸ்பைவேரைத் தடுக்கவும், பாதுகாப்பை மேலும் பலப்படுத்த அவசர பாதுகாப்பு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. ஆப்பிள் நிறுவனத்தின் ஒவ்வொரு ஐபோன், ஐபாட், மேக் மற்றும் ஆப்பிள் வாட்சையும் பாதிக்கும் பூஜ்ஜிய நாள்( zero-day )பாதிப்புக்கான, பாதுகாப்பு புதுப்பிப்புகளை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிட்டிசன் ஆய்வகத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஒரு குறைபாட்டைக் கண்டறிந்த பிறகு பயனர்கள் தங்கள் சாதனங்களை உடனடியாக புதுப்பிக்குமாறு நிறுவனம் வலியுறுத்துகிறது.சிட்டிசன் ஆய்வகம் தனது கண்டுபிடிப்புகளை ஆப்பிள் நிறுவனத்திற்கு செப்டம்பர் 7-ல் தெரிவித்ததாகக் […]