சத்தீஸ்கர் மாநில சட்டமன்ற தேர்தல் கடந்த 7 மற்றும் 27 என இரு கட்டங்களாக 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற்று முடிந்துள்ளது. வரும் டிசம்பர் 3ஆம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ளது. கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 68 சட்டப்பேரவை தொகுதிகளில் காங்கிரஸ் பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றியது. 15 தொகுதிகளில் பாஜக வென்று இருந்தது. 7 தொகுதிகளில் மாநில கட்சியான பிஎஸ்எப் வென்று இருந்தது. காங்கிரஸ் அரசுக்கு விடைகொடுக்க மக்கள் தயாராகிவிட்டனர்.! அமித்ஷா […]
கௌரி கௌரா பூஜையில், சவுக்கடி வாங்கிய சத்தீஸ்கர் முதல்வர். ஆண்டுதோறும் சத்தீஸ்கர் மாநிலம் துர்க் மாவட்டத்தில் உள்ள ஜஜாங்கிரி மற்றும் கும்ஹாரி ஆகிய இரண்டு கிராமங்களில் கௌரி கௌரா பூஜை என்கிற பாரம்பரிய விழா அனுசரிக்கப்படுகிறது. இந்த விழாவில் சாட்டையால் அடிக்கும் பாரம்பரிய நிகழ்வும் நடைபெறுவதுண்டு. அந்த வகையில், இந்த நிகழ்வில் கலந்துகொண்ட சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகலுக்கு சவுக்கடி வாங்கினார். இந்த சவுக்கடி வாங்குவதால், நல்ல அதிஷ்டம் கிடைக்கும் என்றும், தீமைகள் விலகும் என்றும் கூறப்படுகிறது.
கோவர்தன் பூஜையில் கலந்து கொண்ட முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அவரது கைகளில் 8 முறை சவுக்கடி கொடுக்கப்பட்டது. வடமாநிலங்களில் தீபாவளிக்கு அடுத்தநாள்,கோவர்தன் பூஜை நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், துர்க் நகரில்,சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், கோவர்தன் பூஜையில் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட முதல்வர் பூபேஷ் பாகலுக்கு அவரது கைகளில் 8 முறை சவுக்கடி கொடுக்கப்பட்டது. பின் தன்னை சவுக்கால் அடித்த நபரை கட்டியணைத்தார். முதல்வர் பூபேஷ் பாகல் சவுக்கடி வாங்கிய வீடியோவை […]