நீரவ் மோடியின் வங்கி மோசடி போல சென்னையைச் சேர்ந்த கனிஷ்க் கோல்டு நிறுவனம் ரூ.824.15 கோடி மோசடி செய்துவிட்டதாக பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சிபிஐயிடம் புகார் அளித்தது. சென்னை தியாகராய நகரில் ‘கனிஷ்க் கோல்டு’ நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் இயக்குநர்களாக பூபேஷ் குமார் ஜெயின், நீதா ஜெயின் ஆகியோர் இருந்து வருகின்றனர். இந்த நிறுவனம் கிரிஸ் என்ற பெயரில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தங்க நகை தயாரிக்கும் உற்பத்திக் கூடங்கள் அமைத்து செயல்பட்டு வருகிறது. […]