கோவையில் வளர்ப்பு பூனைக்கு சீர்வரிசையுடன் வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர். கோவை வேலாண்டிபாளையத்தை சேர்ந்தவர்கள் உமாமகேஸ்வரன்-சுபா தம்பதியினர். இவர்கள் அவர்களது வீட்டில் இரண்டு பிரீசியன் இன பூனைகளை வளர்த்து வந்தனர். அந்த பூனைகளுக்கு ஜிரா மற்றும் ஐரிஸ் என பெயரிட்டுள்ளனர். இந்த பூனைகளின் கருவுற்றிருப்பது அவர்களுக்கு தெரிய வந்த நிலையில் பூனைகளுக்கு வளைகாப்பு செய்ய முடிவு எடுத்தனர். அதன்படி தனியார் மருத்துவமனையில் அலங்கரிக்கப்பட்ட ஒரு அறையில் இரண்டு பூனைகளுக்கும் குடும்பத்தினர் வளகாப்பு நடைபெற்றது. இந்த பூனைகளுக்கு சீர்வரிசையாக தேன் […]