முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டசபையில் 110-வது விதியின் கீழ் அறிக்கை வாசித்தார். அதில் கூறியிருப்பதாவது:- சிறைத் துறை குறித்த பின்வரும் அறிவிப்புகளை இம்மாமன்றத்தில் அறிவிக்கின்றேன். சென்னை புழல் மத்திய சிறை2ல் உள்ள இட நெருக்கடியை கருத்தில் கொண்டு, 500 சிறைவாசிகளை கூடுதலாக அனுமதித்திடும் வகையில், 15 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்படும். புழல் மத்திய சிறை 2, வேலூர், கடலூர், திருச்சி, கோயம்புத்தூர், சேலம், மதுரை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய சிறைகளில் […]