தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாய நிலங்கள் மீது ஜேசிபி இயந்திரம் களமிறக்கப்ட்டு விளைநிலங்கள் மூடப்பட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். புறவழிசாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு, நிலங்களை அரசு கையகப்படுத்துவது வழக்கமான ஒன்று. அப்படி கையகப்படுத்துவதில் விலை நிலங்களும் அடங்கும். அப்படி ஒரு நிகழ்வு தான் தற்போது தஞ்சாவூரில் நடைபெற்றுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அருகே கண்டியூர் பகுதியில் விலை நிலங்களில் நடவு செய்யப்பட்டு இருந்தது. நடவு செய்து 60 நாட்களே ஆன நிலையில் தற்போது […]
தமிழகத்தில் 13 நகரங்களில் புறவழிச்சாலை அமைக்க திட்ட அறிக்கைக்கான அரசாணை வெளியீடு. அறந்தாங்கி, திருச்சி, மயிலாடுதுறை, வெள்ளகோவில், ஆலங்குடி, செந்துறை, முசிறி, காங்கேயம், பெண்ணாடம், செங்கம், புதுவயல், திருப்பத்தூரில் புறவழிச்சாலை அமைக்க அரசு திட்ட அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மேலும், திருவண்ணாமலை மேல் கச்சிராப்பட்டு – கீழ் கச்சிராப்பட்டு இடையேயும் பைபாஸ் சாலை அமைக்க திட்ட அறிக்கைக்கான அரசாணை அரசு வெளியிட்டது.