புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி அவர்கள் கர்த்தராகிய இயேசு பாடுபட்டு தன் உயிரை தியாகம் செய்த மனிதநேயத்திற்காக நம்மை நாம் அர்ப்பணிக்க வேண்டும் என ஆளுநர் ஆர்.என். ரவி வலியுறுத்தியுள்ளார். இயேசு கிறிஸ்து மரித்த தினம் புனித வெள்ளி தினமாக அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், கிறிஸ்தவ தேவாலயங்களில் இயேசுவின் பாடுகளை தியானித்து சிறப்பு பிரார்த்தனைகள் நடை பெறுவது வழக்கம். இந்த நிலையில், புனிதவெள்ளியை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி அவர்கள், ‘புனிதவெள்ளி தினத்தில் மாண்புமிகு ஆளுநர், திரு.ஆர்.என்.ரவி […]
புனித வெள்ளி என்பது இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாள். அன்றைய தினமே அவர் சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூறும் வகையில் புனித வெள்ளி அல்லது பெரிய வெள்ளி என்று கிறிஸ்தவர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்துவின் பாடுகளை நினைவுகூர்ந்து ஆலயங்களில் வழிபாடுகள் நடத்தப்படும். இந்த புனித வெள்ளியை தொடர்ந்து, மூன்றாம் நாள் இயேசு உயிர்த்து எழுந்ததை நினைவு கூறும் வகையில் ஈஸ்டர் உயிர்ப்பு பெருவிழா ஞாயிற்றுக்கிழமைகளில் கிறிஸ்தவர்களால் வருடம்தோறும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த […]
இயேசு பிரான் உயிர் தியாகம் செய்த புனித வெள்ளிக்கிழமை அன்று டாஸ்மாக் கடைகளையும்,மதுக்கூடங்களையும் மூடிட ஆணை பிறப்பிக்கவேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து தரப்பினரும் இயேசு பிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையினை துக்கநாளாக “புனித வெள்ளியாக” அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் தியாகத்தை நினைவு கொள்ளும் வகையில் உண்ணாநோன்பிருந்தும், இரத்த தானம் செய்தும் அவருக்கு […]