உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. மிகவும் பிரமாண்டமாக நடைபெறவுள்ள இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட ஏரளாமானோர் பங்கேற்கின்றனர். மேலும் இந்த கோவில் திறப்பு விழாவிற்கு அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் பலருக்கும் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டு இருக்கிறது. யாரெல்லாம் இந்த விழாவில் கலந்துகொள்ளப்போகிறார்கள் என்பதனை பொறுத்திருந்து பார்க்கலாம். இந்நிலையில், வெகு […]
புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்திருந்தது. அதன்படி, பொங்கல் பரிசு பொருட்களுக்கு பதிலாக பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.500 ஏற்கனவே வரவு வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கூடுதலாக ரூ.250 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பயனாளிகளின் வங்கி கணக்கில் ரூ.750 வரவு வைக்கப்படுகிறது. பொங்கல் பரிசாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் – புதுச்சேரி அரசு அறிவிப்பு..! இந்த […]
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப்பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில், இலங்கைக்கு தெற்கே, ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை வரை பெய்தது. அந்த வகையில், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் இராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்தது. தென்காசி, தேனி, மதுரை, திருப்பூர், கோயம்புத்தூர் திண்டுக்கல், […]
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகம் மட்டும்மின்றி புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. […]
புதுச்சேரி மாநிலத்தில் சிவப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் வங்கிக் கணக்கில் பொங்கல் பணம் வழங்கப்படும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இந்த பரிசு தொகையானது பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று வேளாண்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒரு நபர் கொண்ட ரேஷன் அட்டைகளுக்கு ரூ.500 என்றும், இரண்டுக்கு மேற்பட்டோர் உள்ள குடும்பங்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் புதுச்சேரியில் 1,30,791 குடும்பங்கள் பயன்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்கு இலவச […]
நமது லட்சியம் வளர்ச்சி அடைந்த பாரதம் என்று பெயரிடப்பட்ட திட்டத்தின் வாயிலாக நலத்திட்டங்களின் செறிவூட்டலை அடைவதற்கான விழிப்புணர்வு பிரச்சாரம் நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநிலம் பாகூர் கிழக்கு பஞ்சாயத்தில் இந்த நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது, புதுச்சேரி முதல்வர் மக்களுக்கு என்ன திட்டம் கொண்டுவர நினைக்கிறாரோ, அவை அனைத்துக்கும் நான் ஒப்புதல் அளிக்கிறேன். பிரதமர் […]
பல்கலைக்கழக வேந்தர்கள் பொறுப்பில் முதலமைச்சர் இருந்தால் முழுவதும் அரசியல் சாயம் பூசப்படும் என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் முதலமைச்சர் ஸ்டாலின் கருத்துக்கு பதில் தெரிவித்துள்ளார். அதாவது, ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலைப் பல்கலைக்கழகத்தின் 2வது பட்டமளிப்பு விழா நேற்று சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. இந்த விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று பாடகி பி.சுசீலா மற்றும் பி.எம்.சுந்தரம் ஆகிய இரண்டு இசை மேதைகளுக்கு முனைவர் பட்டம் வழங்கி கவுரவித்தார். இதன்பின் முதல்வர் ஸ்டாலின் […]
சமூகவளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி முதலிடம் வகிப்பதாக புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமுதாய வளர்ச்சி குறியீடுகளில் புதுச்சேரி 100-க்கு 65.99% பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளதாகவும், வீட்டு வசதி, குடிநீர் மேலாண்மை, துப்புரவு போன்றவற்றில் முதலிடம் பிடித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்பு தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தமிழக கடலோர மாவட்டங்கள், புதுச்சேரியில் வரும் 20-ஆம் தேதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி ராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறையில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் இருந்தும் ஒன்றும் செய்ய முடிவதில்லை. ஒரு சின்ன முடிவு எடுத்து அதனை செயல்படுத்த முடிவதில்லை. ஒவ்வொரு விஷயத்திற்கும் மத்திய அரசை எதிர்பார்த்து அனுமதி பெற வேண்டியதாக இருக்கிறது. – புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. இன்று புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி தனது ஆதங்கத்தை வெளிப்படையாக மேடையிலேயே வெளிப்படுத்திவிட்டார். அதுவும், மத்திய அமைச்சர் மற்றும் ஆளுநர் முன்னிலையிலேயே வெளிப்படுத்திவிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. நிகழ்வில் முதல்வர் கூறுகையில், புதுச்சேரியை சிங்கப்பூர் மாதிரி மாற்ற […]
கடந்த 121 ஆண்டுகளில் இதுவரையில் சென்னை – புதுச்சேரி கடற்கரைக்கு இடையில் 12 புயல்கள் கரையை கடந்துள்ளன. மாண்டஸ் கடந்தால் 13வது புயலாகும். என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் நிலைகொண்டுள்ள மாண்டஸ் புயல் தற்போது வடதமிழகத்தை நெருங்கி வருகிறது. தற்போது நகர்ந்து வரும் மாண்டஸ் புயலானது மாமல்லபுரம் கடற்கரையில் நாளை அதிகாலை கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள்ளது. இதுகுறித்து வானிலை தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், மாண்டஸ் […]
புதுச்சேரி, மணக்குள விநாயகர் கோவில் பெண் யானை லட்சுமி அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கற்சிலை நிறுவப்பட நடவடிக்கை எடுக்கப்டும் என அமைசர் தெரிவித்தார். புதுச்சேரியில் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் பெண் யானை லட்சுமி உடல்நலக்குறைவால் நேற்று அதிகாலை உயிரிழந்தது. நேற்று மறைந்த லட்சுமி யானை கோவிலுக்கு சொந்தமான இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. பலரும் கண்ணீர் மல்க லட்சுமி யானைக்கு மரியாதை செலுத்தினர். தற்போதும் பலரும் வந்து இறுதி மரியாதை செலுத்தி வருகின்றனர். இது குறித்து இன்று […]
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி , தாழ்வு மண்டலமாக நாளை வலுப்பெறுவதால், நவம்பர் 20 முதல் 22ஆம் தேதிகளில் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக வடகிழக்கு பருவமழை பெய்து வருவதோடு, வளிமண்டல குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மூலமாகவும், வடதமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. தற்போது கொஞ்சம் மழை ஓய்ந்துள்ளளது. இந்நிலையில், வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய […]
ரேஷன் அட்டைதாரர்களுக்கு தீபாவளி போனசாக, 10 கிலோ அரிசி மற்றும் 2 கிலோ சர்க்கரைக்கான பணம் அவரவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என புதுச்சேரி முதல்வர் அறிவித்துள்ளார். புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி இன்று ரேஷன் அட்டைதாரர்களுக்கு சிறப்பு தீபாவளி போனஸை அறிவித்துள்ளார். அதன்படி, தீபவளையை முன்னிட்டு, ரேஷன் ஆட்டைதாரகளுக்கு ரொக்க பணம் வங்கியில் செலுத்தப்பட உள்ளது. பாப்ஸ்கோ சார்பில் தட்டாஞ்சாவடி பகுதியில் சிறப்பு அங்காடி அமைக்கப்பட்டுள்ளது. அதனை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்து, முதல் […]
புதிய கல்வி கொள்கை மூலம் குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கற்றால் மட்டுமே இங்கு வளர்ச்சி என்று பரப்பி திட்டமிட்டே பெற்றோரை குழப்புகிறார்கள். – என புதுச்சேரி திமுக சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் புதுச்சேரி வந்திருந்தார். அப்போது பேசிய அவர், ‘ புதுச்சேரியில் செயல்படும் அரசுப்பள்ளிகள் அனைத்தும் விரைவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்படும்’ என அறிவித்தார். இது […]
மத்திய அரசு ஊழியர்களை போல புதுசேரி அரசு ஊழியர்களுக்கும் அகவிலைப்படியானது 38 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. விலைவாசி உயர்வை கணக்கிட்டு அரசு ஊழியர்களுக்கு சம்பள விகிதத்தை குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒருமுறை அரசு உயர்த்துவது வழக்கமான ஒன்று. அப்படி தான் அண்மையில், மத்திய அரசு ஊளியர்களுக்கு அகவிலைப்படியானது, 34 சதவீதத்தில் இருந்து 38 சதவீதமாக உயர்த்தப்பட்டது. புதுச்சேரி அரசு ஊழியர்களும் மத்திய அரசின் கீழ் கட்டுப்பாட்டில் வருவதால், புதுசேரி அரசு ஊழியர்களுக்கும் அதே போல, அகவிலைப்படியானது […]
புதிய கல்வி கொள்கை பற்றி சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். அது தவறு. விரைவில் புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காரைக்காலில் கூறியுள்ளார். உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, காரைக்காலில், இந்திய விண்வெளி அறிவியல் மையமான இஸ்ரோ சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். அந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, ‘ புதுசேரியில் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் […]
போராட்டக்காரர்களின் கோரிக்கைகள் மத்திய அரசிடம் தெரிவிக்கப்படும் என முதல்வர் ரங்கசாமி உடன் மின்துறை ஊழியர்கள் இடையே நேற்று நடந்த பேச்சுவார்த்தையில் உறுதியளித்த பின்னர், இந்த பேச்சுவார்த்தையில் ஓர் உடன்பாடு எட்டப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி மின்சாரத்துறையானது, தனியாரிடம் ஒப்படைக்கப்பட மத்திய அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், மின்துறை ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினர். கடந்த 28ஆம் தேதி தொடங்கிய இந்த போராட்டம் நேற்று வரை நீடித்தது. கடந்த ஞாயிற்று கிழமை புதுசேரி காவல்துறையினர் , துணை ராணுவபடையின் உதவியுடன் […]
புதுச்சேரியில் நேற்று நள்ளிரவில் காவல்துறையினர் போராட்டம் நடத்தியவர்களை கைது செய்தனர். அவர்களை மண்டபத்தில் வைத்துவிட்டு பின்னர் விடுவித்தனர். புதுச்சேரியில் மின்சாரத்துறையை அரசு தனியார்மயமாக்கும் முடிவில் தீவிரமாக இயங்கி வருகிறது. இதன் பேச்சுவார்த்தை தொடங்கும் போதே மின் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அப்போதே ஊழியர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. அண்மையில் தனியார்மயமாக்கல் குறித்து டெண்டர் கோரப்பட்டது. இதற்கு கடுமையான எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மின் ஊழியர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் […]
புதுச்சேரியில் ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த அனுமதி. புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது. அதே போல் காரைக்காலில் நாளை மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக கடற்கரை சாலை சென்றடைந்து நிறைவுபெறுகிறது. இந்த ஊர்வலம் நடைபெறும் இடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட […]