தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும், தமிழகம் மட்டும்மின்றி புதுச்சேரியிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்காலில் அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிப்பட்டுள்ளது. குறிப்பாக, பாகூர், காலாப்பட்டு, தவளக்குப்பம், அரியாங்குப்பம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை தொடர்கிறது. இதனால், பல்வேறு இடங்களில் வெள்ளம் நீர் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்கை பாதிக்கப்பட்டுள்ளது. […]