இனிமேல் சட்டப்பேரவை வளாகத்தில் வர தடுப்பூசி கண்டிப்பாக செலுத்தியிருக்க வேண்டும் என புதுச்சேரி அரசு அறிவுறுத்தியுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாநில அரசும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பல்வேறு தேவைகளுக்காகவும் தொகுதி விவகாரங்களுக்கும் நாள்தோறும் ஆயிரக்கணக்கானோர் சட்டப்பேரவை வளாகத்திற்கு வந்து செல்கின்றனர். இதுதவிர சட்டப்பேரவையில் உள்ள பல்வேறு அலுவலகங்களில் நூற்றுக்கணக்கான ஊழியர்கள் பணியாற்றி […]
புதுச்சேரி சபாநாயகர் செல்வம் அவர்கள் நெஞ்சுவலி காரணமாக புதுச்சேரி அரசு மருத்துவமனையில் அனுமதி. புதுச்சேரியில் கடந்த 26-ம் தேதி சட்டப்பேரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டமானது செப்-3ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டத்தில் பங்கேற்க வந்த சபாநாயகர் செல்வத்திற்கும் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் புதுச்சேரி அரசு மருத்துவமனை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
புதுச்சேரி சட்டப்பேரவை வளாகத்தில் பா.ஜ.க.வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க.வால் நியமிக்கப்பட்ட 3 எம்எல்ஏக்களை சட்டப்பேரவையில் அனுமதிக்க வலியுறுத்தி அவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.