தென்மாவட்டங்களில் பெய்த கனமழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ள பெருக்கால், திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்ட நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி அப்பகுதிகள் முழுவதையும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதனால் இரு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வரலாறு காணாத அளவுக்கு கனமழையால் மக்கள் வெகுவாக பாதிக்கப்பட்டனர். இந்த வெள்ள பாதிப்புகளை நேரில் பார்வையிட புதுச்சேரி துணைநிலை ஆணையர் தமிழிசை சௌந்தரராஜன் தூத்துக்குடி வந்திருந்தார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக சார்பில் […]
எனக்கு குடியரசுத் தலைவர் வேட்பாளராக வாய்ப்பு வந்தது ,ஆனால் மக்களோடு மக்களாகத்தான் இருப்பேன் என்று கூறிவிட்டேன் என தமிழிசை பேச்சு. தெலுங்கானா ஆளுநராக பதவியேற்று மூன்று ஆண்டுகள் நிறைவு பெற்றது முன்னிட்டு நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்கள் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், எனது அப்பா ஒரு தேசிய கட்சித் தலைவர் , அதற்கு நேர்மாறான தேசியக் கட்சியில் நான் தலைவராக இருந்தது தமிழகத்திற்கு செய்த மிகப்பெரும் கடமையாக நினைக்கிறேன். எப்போதும் இயல்பாக […]
புதிய கல்வி கொள்கை பற்றி சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். அது தவறு. விரைவில் புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காரைக்காலில் கூறியுள்ளார். உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, காரைக்காலில், இந்திய விண்வெளி அறிவியல் மையமான இஸ்ரோ சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். அந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, ‘ புதுசேரியில் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் […]
செவிலியர் தினத்தை முன்னிட்டு தமிழிசை சௌந்தரராஜன் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட். புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் செவிலியர் தினத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், ‘மருத்துவர்களுக்கு பக்கபலமாகவும், மருத்துவம் பெறுபவர்களுக்கு பக்கத் துணையாகவும், கரோனா உச்சத்திலும்.. அச்சமின்றி..நமக்கு துணை நின்ற வெள்ளுடை தியாகிகளுக்கு…நாம் துணை நிற்போம்… செவிலியர் தின நல்வாழ்த்துக்கள்’ என பதிவிட்டுள்ளார். மருத்துவர்களுக்கு பக்கபலமாகவும், மருத்துவம் பெறுபவர்களுக்கு பக்கத் துணையாகவும், கரோனா […]
தமிழ்நாட்டைத் தொடர்ந்து, புதுச்சேரியிலும் ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து புறக்கணிப்பு. தமிழ் புத்தாண்டையொட்டி தேநீர் விருந்தில் பங்கேற்குமாறு அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார். திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தேநீர் விருந்தில் பங்கேற்கமாட்டோம் என தெரிவித்தனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் அதிமுக, பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொண்டனர். ஆளுநரின் தேநீர் விருந்தில் திமுகவின் கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, விசிக, சிபிஎம், சிபிஐ, தவக உள்ளிட்ட கட்சிகள் நிராகரித்தது. நீட் மசோதாவை […]
புதுச்சேரியில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அனுமதி அளித்துள்ளார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு புதுச்சேரியில் பொது இடங்களில் விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் செல்லவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதுபோல, புதுச்சேரியிலும் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களுக்கு புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அவர்கள் அனுமதி அளித்துள்ளார். மேலும், விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களை கொரோனா விதிமுறைகளை கடைபிடித்து கொண்டாடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதுச்சேரியில் விநாயகர் சதூர்த்தி கொண்டாட்டங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் […]