புதுச்சேரியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்வு. புதுச்சேரியில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை உயர்த்தி புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி உத்தரவின் பேரில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடி மக்களுக்கான இறுதி ஈமச்சடங்கு உதவி தொகை 15 ஆயிரத்திலிருந்து 25 ஆயிரமாக உயர்த்தி, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா உத்தரவிட்டுள்ளார்.
புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், இரண்டு இடங்களில் ஊர்வலம் நடைபெறுகிறது. புதுச்சேரியில் இன்று ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, புதுச்சேரி காமராஜர் சாலையில் இருந்து ஆர்.எஸ்.எஸ் அணிவகுப்பு ஊர்வலம் புறப்பட்டு முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கடலூர் சாலையில் உள்ள சிங்கார வேலர் சிலை அமைந்துள்ள இடத்தில் நிறைவடைகிறது. அதே போல் காரைக்காலில் இன்று மாலை 4 மணிக்கு புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்படும் அணிவகுப்பு ஊர்வலம் முக்கிய […]
காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக வாந்தி, வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதன்காரணமாக,மாவட்ட நிா்வாகம் சாா்பில்,மாவட்டம் முழுவதும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில்,அது காலராவுக்கான அறிகுறியாக இருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில்,கடந்த 10 நாட்களில் 800-க்கும் மேற்பட்டோருக்கு வாந்தி,வயிற்றுப்போக்கு,மயக்கம் போன்ற உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் காலரா நோய் பரவும் அபாயம் இருப்பதாக புதுச்சேரி சுகாதாரத்துறை எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில்,காரைக்கால் மாவட்டத்தை “பொது சுகாதார அவசர நிலையாக” புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. இது தொடர்பாக,புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள […]
புதுச்சேரி பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. புதுச்சேரியில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வரும் நிலையில், இந்த ஆண்டுக்கான பள்ளி இறுதி தேர்வுகள் குறித்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் சிவகாமி பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதன்படி, பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 9-ம் வகுப்பு வரையிலான இறுதி தேர்வுகள் வருகிற 25-ந்தேதி தொடங்குகிறது. 29-ந்தேதியுடன் தேர்வுகள் அனைத்தும் நிறைவு பெறுகின்றன. இந்த தேர்வுக்கு […]
புதுச்சேரி:ஜன.31 வரை அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி அரசு அறிவிப்பு! கொரோனா பரவல் அதிகரிப்பின் காரணமாக தமிழகத்தை தொடர்ந்து, அனைத்து பள்ளி,கல்லூரிகளுக்கு ஜன.31 வரை விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி அரசு அறிவித்துள்ளது. புதுச்சேரியில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொற்று காரணமாக,1-9 ஆம் வகுப்புகள் வரை ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது 10,11,12 ஆம் வகுப்புகளுக்கும் மற்றும் கல்லூரிகளுக்கும் ஜனவரி 31 வரை விடுமுறை வழங்குவதாக புதுச்சேரி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் அறிவித்துள்ளார். […]
புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கட்டுப்பாடுகளுடன் புத்தாண்டு கொண்டாட அனுமதி அளித்து புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனை அடுத்து, இன்று முதல் புதுச்சேரி கடற்கரையில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று முதல் புதுச்சேரி கடற்கரைக்கு வருபவர்கள் கண்டிப்பாக முக கவசம் அணிந்து வரவேண்டும். இரண்டு தடுப்பூசி போட்டவர்கள் மட்டுமே கடற்கரையில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும், கடற்கரைக்கு வருபவர்கள் […]
தமிழகத்தை தொடர்ந்து புதுவையிலும் பெண்களுக்கான இலவச பேருந்து திட்டம் விரைவில் அமல்படுத்தப்படவுள்ளது. தமிழகத்தில் திமுக தலைமையிலான ஆட்சி அமைந்த பின். பெண்கள் அரசு பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்ற அறிவிப்பை வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பிற்கு பெண்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், லட்சக்கணக்கான பெண்கள் நாள்தோறும் பேருந்துகளில் இலவசப் பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து அம்மாநில போக்குவரத்துத்துறை அமைச்சர் சந்திர பிரியங்கா கூறுகையில், […]