புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் தாலுக்கா நமணசமுத்திரம் அருகே திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (30.12.2023) அதிகாலை சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலிருந்து மூன்று வெவ்வெறு நான்கு சக்கர வாகனங்களில் வெவ்வேறு கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தவர்கள். தேநீர் அருந்துவதற்காக சாலையோரத்தில் வாகனங்களை நிறுத்திவிட்டு தேநீர் அருந்தி கொண்டு இருந்துள்ளார்கள். தேநீர் அருந்திகொண்டிருந்தபோது, சிமெண்ட் ஏற்றிகொண்டு வந்த லாரி எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். மேலும் சிறுமி உள்பட 19 பேர் காயமடைந்தனர். இந்த விபத்து […]