முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன்னர் தமிழகத்தில் உலகம் முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற்றது. அப்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் சார்பில் ஓர் ஒப்பந்தம் போடப்பட்டது. அதில் ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் செயற்கை நுண்ணறிவு பயிற்சி அளிப்பதற்கான திட்டம் வகுக்கப்பட்டது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இது குறித்து குறிப்பிடுகையில், இந்தியாவிலேயே முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயிற்றுவிக்க தமிழகம் முயற்சி எடுத்துள்ளது என குறிப்பிட்டு இருந்தார். காமராஜரும் பிரதமர் மோடியும் ஒன்னா.? திண்டுக்கல் சீனிவாசன் பேட்டி இது குறித்து பேசிய பாஜக […]
புதிய கல்வி கொள்கை தாய் மொழியை ஆதரிக்கிறது. மாணவர்களுக்கு தேவைப்பட்டால் அடுத்த மொழியை கற்க போகிறார்கள். – தமிழிசை சவுந்தரராஜன் தூத்துக்குடியில் மகாகவி பாரதியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். அவர் பேசுகையில், புதிய கல்வி கொள்கை பற்றி பேசியிருந்தார். புதிய கல்வி கொள்கை தாய் மொழியை ஆதரிக்கிறது. மாணவர்களுக்கு தேவைப்பட்டால் அடுத்த மொழியை கற்க போகிறார்கள். இதில் அரசியல் செய்யாதீர்கள். இன்னோர் மொழியை […]
புதிய கல்வி கொள்கையானது இந்திய வரலாற்றை திரிக்கிறது. அதனால் தான் புதிய கல்விக் கொள்கையை நாங்கள் எதிர்க்கிறோம். – என தனது எதிர்ப்பை அண்மையில் பதிவு செய்துள்ளார் ராகுல் காந்தி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் பாரத ஒற்றுமை யாத்திரையை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கடந்த செப்டம்பர் மாதம் 7ஆம் தேதி தொடங்கி 30நாளை கடந்து சென்று கொண்டிருக்கிறது. தற்போது கர்நாடகாவில் ஒற்றுமை யாத்திரையை மேற்கொண்டு வரும் ராகுல் காந்தி இடையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். […]
புதிய கல்வி கொள்கை மூலம் குலக்கல்வி திட்டத்தை மறைமுகமாகவும், நேரடியாகவும் திணிக்கப் பார்க்கிறார்கள். இந்தியை சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தில் கற்றால் மட்டுமே இங்கு வளர்ச்சி என்று பரப்பி திட்டமிட்டே பெற்றோரை குழப்புகிறார்கள். – என புதுச்சேரி திமுக சார்பில் அறிக்கை வெளியாகியுள்ளது. மத்திய கல்வி மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அண்மையில் புதுச்சேரி வந்திருந்தார். அப்போது பேசிய அவர், ‘ புதுச்சேரியில் செயல்படும் அரசுப்பள்ளிகள் அனைத்தும் விரைவில் சி.பி.எஸ்.இ பள்ளிகளாக மாற்றப்படும்’ என அறிவித்தார். இது […]
புதிய கல்வி கொள்கை பற்றி சிலர் தவறான கருத்துக்களை பரப்புகின்றனர். அது தவறு. விரைவில் புதுச்சேரியில் புதிய கல்வி கொள்கை அமல்படுத்தப்படும். என புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் காரைக்காலில் கூறியுள்ளார். உலக விண்வெளி வாரத்தை முன்னிட்டு, காரைக்காலில், இந்திய விண்வெளி அறிவியல் மையமான இஸ்ரோ சார்பில் கண்காட்சி நடத்தப்பட்டது. இதனை புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தொடங்கிவைத்தார். அந்த கண்காட்சி நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் தமிழிசை, ‘ புதுசேரியில் தற்போது தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா மாநிலங்களில் […]
புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய குழு அமைப்பு. புதிய கல்விக் கொள்கையை வடிவமைக்க சான்றோர்கள் மற்றும் வல்லுனர்கள் அடங்கிய மாநில அளவிலான 13 பேர் கொண்ட குழு அமைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். புதிய கல்வி கொள்கையை வடிவமைக்க குழு இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தில் புதிய கல்விக் கொள்கையை வடிவமைப்பது குறித்து ஆய்வு செய்திட, பின்வரும் சான்றோர்கள் அடங்கிய முதலமைச்சர் குழுவினை அமைத்து, மாண்புமிகு திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். குழுவில் […]
புதிய கல்விக் கொள்கையின் மூலமாக பாடத்திட்டங்களை உருவாக்குவதற்கு குழு அமைத்தது மத்திய அரசு. கடந்த 2020-ம் ஆண்டுக்கான புதிய கல்விக் கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஜூலை 29-ம் தேதி அன்று ஒப்புதல் அளித்தது. இந்த புதிய கல்வி கொள்கைக்கு, தமிழகத்தில் திமுக உள்ளிட்ட அரசியல் காட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், மத்திய அரசு உருவாக்கிய புதிய கல்விக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்புகள் இருந்து வரக் கூடிய சூழலில், இந்த புதிய கல்விக் கொள்கையின் மூலமாக, பள்ளிக்கல்விக்கான […]