ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்த தமிழக அரசு சட்டமன்றத்தில் சட்டம் இயற்றி அதன்படி, தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வழக்கம்போல ஆண்டுதோறும் பொங்கல் தின சமயத்தில் நடைபெற்று வருகிறது. அரசு இயற்றிய இந்த சட்டத்திற்கு எதிராக விலங்குகள் நல அமைப்ப்புகள் உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடர்ந்து இருந்தன. இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு எடுத்துகொண்டது. அப்போது ஜல்லிக்கட்டு போட்டியில் விலங்குகள் துப்புறுத்தப்படுவதாக கூறி ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என வாதிடப்பட்டது. […]