திராவிட இளவல் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் அமைச்சராவது சரியான அரசியல் முடிவு என பீட்டர் அல்போன்ஸ் ட்விட். முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பில் வந்த ஒன்றரை ஆண்டுகள் ஆகியும் இன்னும் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படாமல் இருக்கிறது . அதனை பொருட்டு நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. அந்த வகையில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பொறுப்பேற்க உள்ளார். இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் […]
தமிழ்நாட்டை வன்முறை களமாக மாற்றி, வெறுப்பு அரசியலை புகுத்த தமிழக ஆளுநரும், அண்ணாமலையும் முயற்சிக்கிறார்கள். – தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ். இன்று திருநெல்வேலியில் தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘திருநெல்வேலி மாவட்டத்தில் சிறுபான்மையின மாணவர்களுக்கு 7.11 கோடி ரூபாய் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறுபான்மையின மக்களை சந்தித்து, அவர்கள் சந்திக்கும் பிரதான பிரச்னைகளை கண்டறிந்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசித்து […]
உள்துறை அமைச்சரின் அறிவிப்பு தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தை சூனியமாக்கும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். இந்தி பேசும் மாநிலங்களில் ஐஐடி, மத்திய பல்கலைக்கழகங்கள் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் இந்தி பயிற்று மொழியாகவும், பிற மாநிலங்களில் பிராந்திய மொழிகள் பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்று அலுவல் மொழிகளுக்கான நாடாளுமன்றக் குழு பரிந்துரைத்துள்ளது. இதுகுறித்து பீட்டர் அல்போன்ஸ் அவர்கள், அனைத்து ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களிலும் இந்தியே பயிற்றுமொழியென்றும், ஒன்றிய அரசின் வேலைவாய்ப்புகளுக்கான தேர்வுகளின் வினாத்தாள்களும் இந்தியிலேயே இருக்கும் […]
அரசியல் கட்சி தொண்டர்களே சட்டம் ஒழுங்கை பார்த்துக்கொள்வர் என்றால் காவல் துறையும் நீதிமன்றங்களும் எதற்கு? என பீட்டர் அல்போன்ஸ் கேள்வி. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை செய்தியாளர் சந்திப்பின்போது தமிழ்நாட்டில் தேசத்துக்கு எதிரான சக்திகள் அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வர நம் தொண்டர்களுக்கு வெறும் அரை மணி நேரம் போதும். ஆனால் பாரதிய ஜனதா கட்சி ஒரு அமைதியை விரும்பக்கூடிய கட்சி. அடுத்த இரண்டு நாட்கள் பார்ப்போம். தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை செயல்பாட்டை பார்த்துவிட்டு எங்களது […]
உலகமே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப்படும் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்காகும் செலவினங்களில் ஒன்றிய அரசு ஒரு ரூபாய் கூட கொடுக்கவில்லை என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற உள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டிகளின் தொடக்க விழா மற்றும் நிறைவு விழா நிகழ்ச்சிகள் சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளன. இந்த நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழா இன்று […]
மூடிமறைக்கப்படும் அக்கிரமங்களை வெளிக்கொணர, போராடுவதற்காகத்தானே எதிர்க்கட்சிகள்! சீனாவைப்போல எதிர்க்கட்சியே வேண்டாமா? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் கடந்த 18 ஆம் தேதி தொடங்கியது. கூட்டத்தொடர் தொடங்கியது முதலே, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், பல்வேறு முக்கிய பிரச்னைகளை எழுப்பி விவாதம் நடத்த வேண்டும் என தொடர்ந்து முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த நிலையில், நேற்று மாநிலங்களவைத் தலைவர் இருக்கையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய காரணத்தால், திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, அப்துல்லா, சண்முகம், […]
வினாத்தாள் சர்ச்சை தொடர்பாக துறை நடவடிக்கை எடுப்பதோடு தீண்டாமை ஒழிப்பு சட்டத்தின் கீழ் கிரிமினல் நடவடிக்கையும் எடுக்க வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் வலியுறுத்தல். சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பருவ தேர்வு வினாத்தாளில் சாதி குறித்து கேட்கப்பட்ட ஒரு கேள்வி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், இதற்கு அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கண்டங்களை தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து, சேலம் பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறிழைத்தோர் மீது துறை மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் […]
ரூ.55461 கோடி லாபம் சம்பாதித்த அம்பானி வெறும் ரூ.1722 கோடி மட்டும்தான் வரி கட்டுகிறாரே-அது எப்படி? என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். பொதுவாக சமையல்,வணிக கேஸ் சிலிண்டர் விலை மாதம் தோறும் முதல் தேதியில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,கடந்த ஜூன் 1 ஆம் தேதி சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை ரூ.3 அதிகரித்து ரூ.1018.50-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், சென்னையில் வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை மேலும் ரூ.50 அதிகரித்து ரூ.1068.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த […]
மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக அறிவித்ததற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்த பீட்டர் அல்போன்ஸ். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் அவர்களின் பிறந்த நாளான ஜூன் 3 ஆம் தேதி இனி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று 110 விதியின்கீழ் சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் […]
தலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ள நிலையில், முதல்வருக்கு பீட்டர் அல்போன்ஸ் வாழ்த்து தெரிவித்து ட்வீட். முதல்வர் துபாய் பயணம் தமிழகத்துக்கு முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை மாலை துபாய் பயணம் மேற்கொள்கிறார். துபாயில் நடைபெறும் தொழில் கண்காட்சியில் பங்கேற்கும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்திக்கின்றார். முதலமைச்சருடன்,எம்எல்ஏ உதயநிதி உள்ளிட்டோரும் துபாய்க்கு பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதல் முறையாக வெளிநாடு பயணம் மேற்கொள்ளவுள்ளார் […]
இயேசு பிரான் உயிர் தியாகம் செய்த புனித வெள்ளிக்கிழமை அன்று டாஸ்மாக் கடைகளையும்,மதுக்கூடங்களையும் மூடிட ஆணை பிறப்பிக்கவேண்டுமென்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை வைத்துள்ளார். அதில், ‘உலகெங்கும் இருக்கும் கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது உலகின் அனைத்து தரப்பினரும் இயேசு பிரான் சிலுவையில் அறைந்து கொல்லப்பட்ட வெள்ளிக்கிழமையினை துக்கநாளாக “புனித வெள்ளியாக” அனுஷ்டிக்கின்றனர். அன்றைய தினம் இயேசு கிறிஸ்துவின் மாபெரும் தியாகத்தை நினைவு கொள்ளும் வகையில் உண்ணாநோன்பிருந்தும், இரத்த தானம் செய்தும் அவருக்கு […]
தமிழக அலங்கார ஊர்தி சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழா கொண்டாட்ட ஊர்வலத்தில் இடம்பெறும் என்ற தமிழக முதல்வரின் அறிவிப்பிற்கு வரவேற்பு தெரிவித்து சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவர் பீட்டர் அல்போன்ஸ் வரவேற்பு தெரிவித்து ட்வீட். டெல்லியில் நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்ள கோரிக்கை செய்து தமிழக அரசு சார்பில் வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார், கப்பலோட்டிய தமிழர் உள்ளிட்ட சுதந்திர போராட்ட வீரர்களின் உருவப்படங்கள் அடங்கிய ஊர்திகள் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழகத்தின் சார்பில் கொடுக்கப்பட்ட […]
தமிழ்நாட்டிற்கு மட்டும் ஏன் நிதிஇல்லை? அண்ணாமலையாருக்கு மட்டுமே தெரியும் என பீட்டர் அல்போன்ஸ் ட்வீட். பிரதான் மந்திரி ஸ்வஸ்திய சுரக்ஷா யோஜனா (பிஎம்எஸ்எஸ்ஒய்) திட்டம் கடந்த 2003ம் ஆண்டு ஆகஸ்ட் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் இதுவரை 22 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள் அமைக்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 2015ஆம் ஆண்டில் தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 2018 இல் மதுரை தோப்பூரில் அமைக்க இடம் தேர்வு செய்து 2019 ஜனவரி 27 இல் அடிக்கல் […]
சமையல்கேஸ் விலை குறைப்பே ஏழை,எளிய,நடுத்தட்டுமக்களுக்கான தீபாவளிபரிசு! நேற்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி இன்று முதல் ரூ.5 மற்றும் ரூ.10 குறைக்கப்படும் என்று தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், சிறுபான்மை நல ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘பெட்ரோல்,டீசல் விலையினை குறைத்த ஒன்றிய அரசு சமையல்கேஸ் விலையினையும் குறைக்கவேண்டும். குடும்ப உபயோக சிலிண்டர் ₹916 டீஸ்டால் […]
நோபல் பரிசு பெற்ற டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்த சிறுபான்மை நலத்துறை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ். டேவிட் ஜூலியஸ் மற்றும் ஆர்டெம் படபூட்டியன் ஆகியோருக்கு “வெப்பநிலை மற்றும் தொடுதலுக்கான ஏற்பிகளைக் கண்டுபிடித்ததற்காக” நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, வெப்பம், வலி, உடல் அழுத்தம் ஆகியவற்றை தொடாமல் உணரக்கூடிய சென்சார் கருவியைக் கண்டுபிடித்ததற்காக இந்த பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் […]
வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களும் பொதுமக்களின் வழிபாட்டுக்காக திறக்கப்பட வேண்டும் என பீட்டர் அல்போன்ஸ் கோரிக்கை. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வந்த நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி தொற்று பாதிப்பு குறைந்துள்ள நிலையில், தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தொற்று பரவல் அதிகரிப்பதை தடுக்கும் வண்ணம், தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி, […]