BSPHCL: பீகார் ஸ்டேட் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் (BSPHCL) மூலம் டெக்னீசியன் கிரேடு-III, ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளர்க், கரஸ்பாண்டன்ஸ் கிளர்க், ஸ்டோர் அசிஸ்டென்ட் உள்ளிட்ட பணிகளுக்கான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. ஸ்டேட் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட் ஆனது பீகார் மாநிலத்திற்குள் செயல்படும் அரசுக்கு சொந்தமான மின்சார ஒழுங்குமுறை வாரியமாகும். தற்பொழுது வெளியிடப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள், அனைத்து தகுதி நிபந்தனைகளையும் படித்துவிட்டு BSPHCL-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான Power Holding Company என்ற இணையதளத்தில் […]
INDIA Alliance : பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடைய தொகுதி பங்கீட்டில் தொடர்ந்து இழுபறி நீடித்து வந்த நிலையில், தற்போது இறுதியானது. நாடாளுமன்ற மக்களவை தேர்தலை முன்னிட்டு பீகார் மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் இறுதி செய்யப்பட்டது. 40 மக்களவை தொகுதிகளை கொண்ட பீகார் மாநிலத்தில் ஏப்ரல் 19, 26, மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. பீகார் […]
BSPHCL: பீகார் மாநிலம் பவர் ஹோல்டிங் கம்பெனி லிமிடெட்டின் (BSPHCL) துணை நிறுவனங்களான நார்த் மற்றும் சவுத் பீகார் பவர் டிஸ்ட்ரிபியூஷன் கம்பெனி லிமிடெட் ஆகியவற்றில் காலியாக உள்ள ஜூனியர் அக்கவுண்ட்ஸ் கிளார்க் பணிக்கான ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தொடக்க தேதி வருகின்ற 1ம் தேதி முதல் தொடங்குகிறது. விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 30-04-2024 அன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் மற்றும் அனைத்து தகுதி நிபந்தனைகளை படித்துவிட்டு BSPHCL-ன் […]
பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ் குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. இதன்பின் முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். பின்னர் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. கடந்த மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார், ராஷ்ட்ரிய ஜனதா தள […]
இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள தலைவருமான நிதிஷ் குமார், அதிருப்தி காரணமாக கடந்த ஜனவரி மாதம் அங்கிருந்து விலகி மீண்டும் பாஜகவின் என்டிஏ கூட்டணியில் ஐக்கியமானார். இதன்பின், பாஜக ஆதரவுடன் கடந்த ஜனவரி 28-ம் தேதி பீகாரில் 9-வது முறையாக நிதிஷ் குமார் முதல்வராக பதவியேற்றார். பாஜகவை சேர்ந்த சாம்ராட் சவுத்ரி, விஜய் சின்ஹா ஆகியோர் துணை முதல்வர்களாக உள்ளனர். இந்த நிலையில், நிதிஷ்குமார் அரசு மீது இன்று பீகார் சட்டசபையில் நம்பிக்கை […]
பீகார் மாநிலத்தில் கடந்த 2020-ல் சட்டசபை தேர்தலில் பாஜக- நிதிஷ்குமார் கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியது. முதல்வராக இருந்த நிதிஷ்குமார் திடீரென பாஜக உடன் கூட்டணியை முறித்துக் கொண்டு ராஷ்டிரிய ஜனதா தளத்துடன் சேர்ந்து ஆட்சி அமைத்தார். பின்னர் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்டிரிய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. கடந்த ஜனவரி மாதம் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி […]
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீட்டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் நாடு முழுக்க உள்ள காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியை உருவாக்கிய முக்கிய நபர்களில் ஒருவராக பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் இருந்தார். ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு பீகார் முதல்வர் நிதிஷ்குமார் இந்தியா கூட்டணியில் […]
பீகாரில் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று அமைந்த நிலையில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான அமைச்சரவை இன்று முதல் கூட்டம் நடைபெற உள்ளது. மாநில தலைமை செயலகத்தில் காலை 11:30 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர்கள் சாம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா மற்றும் பிற அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். அமைச்சர்களுக்கான இலாகா ஒதுக்கீடுகள் இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என கூறப்படுகிறது. பீகார் அமைச்சரவையில் அதிகபட்சமாக 35 அமைச்சர்கள் […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கும் சமயத்தில், இந்திய அரசியல் களத்தில் பல்வேறு பரபரப்பான மாற்றங்கள் நடந்து வருகிறது. அந்தவகையில், இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதிஷ்குமார், ராஷ்ட்ரிய ஜனதா உடனான கூட்டணியிலிருந்து விலகி மீண்டும் பாரதிய ஜனதாவுடன் புதிதாக கூட்டணி அமைத்திருப்பது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஐக்கியமான ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ்குமார் 9வது முறையாக முதலமைச்சராக நேற்று பதவியேற்றார். அவருக்கு […]
பீகார் : பாஜக எம்எல்ஏக்கள் ஆதரவுடன் பீகார் மாநிலத்தின் முதல்வராக நிதிஷ்குமார் நேற்று 9வது முறையாக பதவியேற்றார். தலைநகர் பாட்னாவில் நடைபெற்ற விழாவில் பீகார் மாநில ஆளுநர் ராஜேந்திர ஹர்லேகர் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நிதிஷ் குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி வைத்து ஆட்சியை பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் வெற்றிக்கு பின்னர், […]
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் ( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமார் தற்போது தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். பீகார் முதல்வர் நிதீஷ்குமார் தனது ராஜினாமா கடிதத்தை கவர்னர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரிடம் கொடுத்துள்ளார். இன்று காலை ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார், ஆளுநரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்துள்ளார். பின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், ஆட்சியை கலைக்க கோரி ஆளுநரிடம் கூறியுள்ளேன். பலபேரிடம் இந்த ஆலோசனை கேட்ட பிறகே இந்த முடிவை […]
பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம்( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமாரும் மீண்டும் கட்சி மாறுவது குறித்து பீகாரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடன் கூட்டணியை முறித்து கொண்டு இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இன்று காலை 10 மணிக்கு ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தலாம் என்று இதைத் தொடர்ந்து அவர் ராஜ்பவனுக்குச் […]
ஆளும் பாஜக அரசுக்கு எதிராகவும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) கூட்டணிக்கு எதிராகவும் காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி , திரிணாமுல் காங்கிரஸ், உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா (I.N.D.I.A) எனும் கூட்டணியை உருவாக்கினர். இந்த கூட்டணியினை முதலில் ஒன்றிணைத்து முதல் ஆலோசனை கூட்டமே பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தள கட்சியின் தலைவருமான நிதிஷ்குமார் அழைப்பின் பெயரில் பீகார் தலைநகர் பாட்னாவில் நடைபெற்றது. அதே போல அடுத்தடுத்த இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்திலும் […]
ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான முதல்வர் நிதிஷ் குமார் தனது கூட்டணி கட்சியான லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியுடன் விலகி வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இந்த தகவலால் பீகாரில் அரசியல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து (ஆர்ஜேடி) RJD மற்றும் ஜேடியு (JDU) ஆகிய இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் […]
இந்தியா கூட்டணியில் உள்ள ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என்று பரபரப்பான தகவல்கள் வெளியாகி வருகிறது. பீகார் மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதாதள தலைவருமான நிதிஷ்குமார், கடந்த 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையும், 2020-ம் ஆண்டு பீகார் சட்டசபை தேர்தலையும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தார். அதன்படி, 2020-ம் ஆண்டு நடைபெற்ற பீகார் மாநில சட்டசபை தேர்தலில் பாஜக, நிதிஷ்குமாரின் ஜேடியூ இணைந்து போட்டியிட்டன. பீகாரில் […]
சுதந்திர போராட்ட வீரரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவில் பிறந்த கர்பூரி தாக்கூர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் சென்றவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கர்பூரி தாக்கூர், 1977 – 1979 காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தபோது ஜனதா கட்சியில் ஐக்கியமானார். அரசு பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு […]
தற்போது நாடு முழுவதும் வாகனங்களின் அதிகரிப்பு, இயற்கை வளங்களின் பரப்பளவு குறைப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காற்றின் தரம் பல்வேறு நகரங்களில் மோசமடைந்து வருகிறது. தமிழக தலைநகர் சென்னையின் காற்றின் தரம்கூட நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் காற்றின் தரம் மோசமடைந்து உள்ள நகரங்களின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. இதில் மோசமான நிலை, மிகவும் மோசமான நிலை என மாறி மாறி டெல்லியின் காற்றின் தரம் பதிவாகி உள்ளது. இன்று காலை 7.00 […]
பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் கொரோனா சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மத்திய அரசின் அறிவுறுத்தலின் பெயரில், சீனா, ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து இந்தியா வருவோருக்கு கண்டிப்பாக கொரோனா பரிசோதனை எடுக்கபட்டு வருகிறது அதன்படி, பீகாரில், கயாவில் உள்ள விமான நிலையத்தில் சோதனை செய்ததில் நான்கு வெளிநாட்டினருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து அவர்கள் […]
இந்தியாவில் முதன் முதலாக பீகாரில் ஜனவரி 7முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் சாதி வாரியிலனா கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை மத்திய அரசிடம் மாநில அரசுகள் வைத்து வருகின்றன. இதில் முதற்கட்டமாக பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் அதற்கான முன்னெடுப்பை தொடங்கியுள்ளார். பீகாரில் புத்தாண்டு முடிந்ததும், ஜனவரி 7ஆம் தேதி முதல் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. மே மாதம் வரையில் இந்த கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. […]
பீகாரில், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்கு ஹோமியோபதி மருந்துகள் கொண்ட ரசாயனங்கள் மற்றும் சர்க்கரை உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாடுகளுக்கு முன்னர் நாட்டில் அதிர்வலையை ஏற்படுத்திய சம்பவம் என்றால் அது பீகார் கள்ளச்சாராய சம்பவம் தான். பீகார் சரண் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 72 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து , இசுவாபூர் காவல் நிலைய அதிகாரி உட்பட 5 அரசு அதிகாரிகள் அண்மையில் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். இந்த வழக்கை […]