தமிழகத்தில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ல் உத்தரவிட்ட நிலையில், அன்றாட பயன்படுத்தப்படும் உணவு பொருட்களான அரிசி, பருப்பு, சர்க்கரை மற்றும் பால் உள்ளிட்டு பொருட்களை பிளாஸ்டிக்கில் அடைத்து விற்பதற்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டது. ஆனால் கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த விதிவிலக்கும் அரசாணை மூலம் திரும்பப் பெறப்பட்டது. இதைத்தொடர்ந்து, ஒரு முறை பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு விதித்த தடை உத்தரவை மறு ஆய்வு செய்யக் கோரி, தமிழ்நாடு, புதுச்சேரி பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் […]
பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியர் ஒரே நாளில் 187 டன் பிளாஸ்டிக்கை அதிகாரிகள் உதவியுடன் கைப்பற்றி மறுசுழற்சிக்கு அனுப்பிவைத்தார். என அமைச்சர் மெய்யநாதன் பேசினார். தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மெய்யநாதன் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அதில் தமிழகத்தில் பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் பண்டிகை கால பிளாஸ்டிக் பயன்பாடு குறித்தும் பேசினார். அதில், கடந்த 2019 தொடக்கத்தில் 14 வகை பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு மாநில அரசு தடை விதித்தது. அதே போல, மத்திய அரசும் […]
கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை என மாநகராட்சி எச்சரிக்கை. கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் ஆகிய கடற்கரையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளது. பிளாஸ்டிக் இல்லா கடற்கரைகளாக பராமரிக்கப்படும் 3 இடங்களிலும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காலை, மாலை என இரு வேளைகளில் […]
நம்ம பயன்படுத்தி நம்ம உசுரோட இருக்கும் வரை மக்காம இருக்கிறது ரெண்டே ரெண்டுதான். சுற்றுச்சூழல்,காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள,தமிழ்நாடு அரசின் “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கத்தை,முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள குறும்படத்தையும் முதல் வெளியிட்டுள்ளார். அதில் விஜய் சேதுபதி அவர்கள், ‘இந்த உலகத்துல நம்ம எல்லாருக்கும் பிரச்சனை இருக்கு. ஆனா இப்ப இந்த உலகத்துக்கு ஒரு பிரச்சனை இருக்கு. […]
கனடாவிலுள்ள, பிராண்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், தேனீ வளர்ப்போருக்கு சவாலாக இருக்கும் மெழுகுப் புழுக்கள் குறித்து ஆராய்ந்தபோது ஒரு புதிய அற்புதம் தெரியவந்தது. மெழுகுப் புழுக்களின் வயிற்றிலுள்ள சில கிருமிகள் பிளாஸ்டிக்கை எளிதில் செறித்து, ஆல்கஹாலாக மாற்றித்தரும் திறனைக் கொண்டிருந்தன. எனவே, இந்த கிருமிகளை தனியே எடுத்து ஆராய்ந்தனர். ஆனால், புழுக்களின் வயிற்றில் இருக்கும்போது அக் கிருமிகள் பிளாஸ்டிக்கை சிதைத்த வேகத்தைவிட, தனியே ஆய்வகத்தில் செறிமானம் செய்த வேகம் குறைவாக இருந்தது. இதனால், புழுக்களின் வயிற்றில் அக் கிருமிகளுக்கு […]