Vijayakanth : கோட் படத்தில் விஜய்காந்த் AI மூலம் வரவுள்ளதாக அவருடைய மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார். கேப்டன் விஜயகாந்த் AI மூலம் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் கோட் படத்தில் வரவுள்ளதாக முன்னதாகவே தகவல்கள் வெளியாகி இருந்தது. விஜயகாந்த் விஜய்க்கும, வெங்கட் பிரபு குடும்பத்திற்கும் மிகவும் நெருக்கமானவர். எனவே, அவர் இந்த மண்ணில் இப்போது இல்லை என்பதால் அவருக்கு மரியாதையை செலுத்தும் விதமாக AI உருவாக்கம் மூலம் வெங்கட் பிரபு விஜயகாந்தை ஒரு காட்சியில் […]
Premalatha: பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தல் கொடுத்ததாக பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றசாட்டு. மக்களவை தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது, அரசியல் கட்சி தலைவர்கள் மாறி மாறி குற்றசாட்டுகளை முன்வைத்து விமர்சித்து வருகின்றனர். அந்தவகையில் பாஜகவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என அச்சுறுத்தியதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பரப்பரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதிமுக கூட்டணியில் தேமுதிக திருவள்ளூர் தொகுதியில் போட்டியிடுகிறது. அந்த தொகுதியில் தேமுதிக […]
Elections2024 வரும் மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் ஒரு அங்கமாக இருக்கும் தேமுதிக கட்சிக்கு ஐந்து மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டன இதற்கான வேட்பாளர் பட்டியலை தற்போது தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டு உள்ளார். read more- பாஜக வேட்பாளராக ராதிகா, ஜான் பாண்டியன்.. வெளியான அடுத்த லிஸ்ட்… அதன்படி விருதுநகரில் விஜயகாந்த் (Vijayakanth) இளைய மகன் விஜய பிரபாகரன் முதல் முறையாக மக்களவைத் தேர்தலில் களம் காண்கிறார். மற்ற தேமுதிக வேட்பாளர்கள் விவரம் […]
DMDK : நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து அதிமுகவுடன் பேச்சுவார்த்தையை தேமுதிக நிறுத்தி கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மக்களவை தேர்தலுக்கான அட்டவணை இன்னும் வெளியாகாத நிலையில், வரும் நாட்களில் தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. Read More – திமுக கூட்டணியில் விசிகவுக்கு 2, காங்கிரஸுக்கு 10 தொகுதிகள் ஏன்.? திருமா விளக்கம்… இருப்பினும், தேர்தலுக்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக அதன் கூட்டணி கட்சிகளுடனான தொகுதி […]
நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட தேமுதிக முடிவு செய்துருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கிறது. பிரதான அரசியல் கட்சிகள் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையிலும், தொகுதிப் பங்கீட்டு ஆலோசனையிலும் மும்முரமாக ஈடுபட்டுள்ளன. முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி..! தேமுதிக கட்சியன் ஆலோசனை கூட்டம் ஏழாம் தேதி நடந்து முடிந்திருக்கிறது. இந்நிலையில் தேமுதிக தலைவரும், […]
நடிகரும், தேசிய முற்போக்கு திராவிட கட்சியின் தலைவருமான கேப்டன் விஜயகாந்த் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். மறைந்த கேப்டன் விஜயகாந்தின் உடல் அரசு மரியாதையுடன் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில், மறைந்த விஜயகாந்தின் திருவுருவப் படம் திறக்கப்பட்டது. இதனை விஜயகாந்தின் மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான […]
நடிகர், தேமுதிக நிறுவன தலைவர் மற்றும் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக இருந்த கேப்டன் விஜயகாந்த், கடந்த டிசம்பர் மாதம் 28ம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். இவரது மறைவு தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியது. அதுமட்டுமில்லாமல், அரசியலில் ஒரு துணிச்சலான, தைரியசாலியை இழந்துவிட்டோம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. ஏனென்றால், ஜெயலலிதா, கலைஞர் இருக்கும் காலத்திலேயே அரசியல் களம் கண்டவர் கேப்டன் விஜயகாந்த். இதனால், அவரது அரசியல் பயணம் பலருக்கும் ஒரு […]
தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சி (தேமுதிக ) தலைவர் விஜயகாந்த் கடந்த சில வருடங்களாகவே உடல்நிலை கருத்தில் கொண்டு கட்சி நிகழ்வில் கூட பெரும்பாலும் பங்கேற்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வருகிறார். உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை அடுத்து வெளிநாடுகளுக்கு சென்றும் இவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் சென்னை மியாட் (MIOT) மருத்துவமனையில் விஜயகாந்திற்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்த வண்ணம் இருந்த நிலையில் விஜயகாந்த் நலமுடன் இருப்பதாக […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். முதலில், விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. பின்னர், அவரது மார்பில் அதிக சளி தேங்கி இருந்ததன் காரணமாக மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதற்கான சிகிச்சைக்காகவே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். […]
கேப்டன் என்று அன்போடு அழைக்கப்படும் நடிகர் விஜயகாந்த் ஆரம்ப காலத்தில் ஆக்சன் படங்கள் பெரிய அளவில் விமர்சனங்களை பெற்று சூப்பர் ஹிட் ஆகி கொண்டு இருந்தது. 1980-90 கால கட்டத்தில் ரஜினி, கமல்ஹாசனுக்கு இணையான ரசிகர்கள் பட்டாளத்தை வைத்து இருந்தவரும் இவர் தான். ஆனால், இப்பொழுது அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாகவே வெளியுலகிற்கு வராமல் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் உடல்நலம் பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு கடந்த சில வருடங்களாகவே வெளியுலகிற்கு வராமல் வீட்டிலேயே மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறார். கடந்த மாதம் உடல்நல பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டி இருந்த நிலையில், நவம்பர் 18ஆம் தேதி சென்னை மனப்பாக்கத்தில் உள்ள மியாட் (MIOT) மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அதன் பிறகு அவருக்கு பல்வேறு மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வந்தன. அந்த சிகிச்சை குறித்தும், விஜயகாந்த் உடல் நிலை குறித்தும் அவரது மனைவி பிரேமலதா […]
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த மாதம் 18-ஆம் தேதி காய்ச்சல், சளி, இருமல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அப்போது, விஜயகாந்த் வழக்கமான பரிசோதனைக்காக சென்றுள்ளதாகவும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என தேமுதிக தரப்பில் கூறப்பட்டது. சமீபத்தில் மியாட் மருத்துவமனை அறிக்கை ஒன்று வெளியானது. அதில், விஜயகாந்த் அவர்களின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், […]
தேமுதிக கட்சி 17 ஆவது ஆண்டின் தொடக்க நாள் கொண்டாட்டத்தை கட்சி கொடியேற்றி தொடங்கியுள்ளது. விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக கட்சி 16 ஆண்டுகள் நிறைவு பெற்று தற்போது 17 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. இதனை அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றி தொடங்கினார். விஜயகாந்த் தேசிய முற்போக்கு திராவிட கழகம் கட்சியை 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி தொடங்கினார். தற்போது இந்த கட்சி 17 ஆவது […]
தமிழக மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டு மாட்டேன் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் அக்கட்சியின் பொதுக்கூட்டத்தில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் மற்றும் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டனர்.அதனைத்தொடர்ந்து இந்நிகழ்ச்சியில் பேசிய விஜயகாந்த் தனது மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவித்து பேசுகையில் மக்களுக்கு ஏதேனும் ஒன்றெனில் பேசிக்கொண்டிருக்க மாட்டேன் ஒன்லி ஆக்சன் தான் என்று ஆவேசமாக தெரிவித்தார். அவரை தொடர்ந்து பேசிய அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் டிக்டாக் செயலியை பெண்கள் பயன்படுத்த […]
விஜயகாந்தை போல் ஹெச்.ராஜா மிகவும் தைரியமானவர் ஆவார் என்று பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது.தமிழகத்தில் மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற உள்ளது.அ.தி.மு.க கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெற்றுள்ளது.அதில் 4 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மேலும் அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலும் வெளயிட்டது தேமுதிக. அதிமுகவுடன் இந்த மக்களவை தேர்தலில் தேமுதிக கூட்டணி வைத்துள்ள நிலையில் தேமுதிக சார்பாக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் […]