திருச்சியை சேர்ந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் (தொழிலாலதிபர்), கடந்த 2012-ம் ஆண்டு மார்ச் மாதம் 29-ந் தேதி கொலை செய்யப்பட்டார். அதிகாலை வீட்டில் இருந்து நடைபயிற்சி சென்றபோது, மர்ம நபர்களால் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதுதொடர்பாக ஸ்ரீரங்கம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், சி.பி.சி.ஐ.டி. போலீசார் மற்றும் சி.பி.ஐ. வசம் வழக்கு ஒப்படைக்கப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளாக விசாரணை தொடர்ந்துகொண்டே இருக்கிறது. கொலையாளிகளை உடனே கண்டுபிடிக்க வேண்டும் […]
இலங்கையில் நடந்த உள்நாட்டு போரில் உயிரிழந்தவர்களின் நினைவாக ‘மாவீரர் தினம்’ ஆண்டுதோறும் நவ.27ம் தேதி அந்நாட்டு தமிழர்களால் கடைபிடிக்கப்படுகிறது. அந்தவகையில், நவ.27ம் தேதி 34-வது மாவீரர் தினத்தில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் மறைந்த பிரபாகரனின் மகள் துவாரகா பெயரில் பெண் ஒருவர் பேசும் வீடியோ ஒளிபரப்பு செய்யப்பட்ட விவகாரம் பரபரப்பையும், சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால், இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு போரில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கடந்த 2009-ம் ஆண்டு ராணுவத்தால் கொல்லப்பட்டார். மேலும், […]
பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் என்பவர் முதலிடம் பிடித்துள்ளார். மதுரை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியானது காலை முதல் விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது நிறைவடைந்துள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 700 காளைகளும் 300 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டனர். இதில் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக பிரபாகரன் என்பவர் ஏழு சுற்றுகள் முடிவில் இருபத்தி ஏழு காளைகளை அடக்கி முதலிடம் பிடித்துள்ளார். இவர், 2020, […]