அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவை பொதுத்தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடிக்கு மக்கள் மீண்டும் வாக்களிப்பார்கள் என மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பட்னாவிஸ், வாஷிங்டன் நகரில் பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு பொறுப்பேற்ற கடந்த 4 ஆண்டுகளில், 67 ஆண்டுகளில் செய்யாத பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அதேநேரம் 67 ஆண்டுகளில் எதுவுமே நிகழவில்லை என்று கூற முடியாது. ஆனால், ஏழை, […]