மியான்மரில் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகளால் 2 தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மியான்மர் நாட்டில் செயல்படும் பியூ ஷா தி எனும் ஆயுதம் ஏந்திய பயங்கரவாத குழு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்த குழுவால் இரண்டு தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். சுட்டுக்கொல்லப்பட்ட 2 தமிழர்களும் மணிப்பூரில் வசித்து வந்தவர்கள். இந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரண்டு தமிழர்களின் உடலும் தற்போது மியான்மரில் உள்ள தம்மு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.