சொத்துக்களில் முதலீடு செய்ய தேவையான நிதி ஆதாரம்; எங்கெங்கு முதலீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறித்து விசாரணை செய்ய நடிகர் விஜய் உள்ளிட்ட மூவருக்குமே சம்மன் அனுப்பப்பட்டு உள்ளதாக வருமான வரித்துறைத் தகவல் தெரிவித்துள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவன தயாரிப்பில் இயக்குநா் அட்லி இயக்கத்தில் நடிகா் விஜய் நடிப்பில் கடந்த தீபாவளி அன்று பிகில் படமானது வெளியானது. 150 கோடி ரூபாய் செலவில் உருவான இப்படம் வெற்றி பெற்றதாக படக்குழுவாலே அறிவிக்கப்பட்டது. படத்தின் வெற்றியைத் தொடர்ந்து தயாரிப்பு நிறுவனத்திற்கு மட்டும் […]