சென்னை:ஒரு ஐடி நிறுவனம் தனது ஊழியர்களுக்கு பிஎம்டபிள்யூ கார்களை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது அனைவரது கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. சென்னையை தளமாகக் கொண்ட சாஃப்ட்வேர் நிறுவனமான கிஸ்ஃப்ளோ நிறுவனத்தின் நிறுவனர் சுரேஷ்,தனது நிறுவனத்தில் பணிபுரியும் ஐந்து நிர்வாகிகளுக்கு தலா சுமார் ரூ.1 கோடி மதிப்புள்ள 5 புத்தம் புதிய பிஎம்டபிள்யூ கார்களை பரிசாக வழங்கியுள்ளார். 10-வது ஆண்டு கொண்டாட்டம்: மென்பொருள் சேவை நிறுவனம் தனது முதன்மையான ‘நோ-கோட்'( No-code work management) பணி மேலாண்மை தயாரிப்பை […]