நாடாளுமன்ற மக்களவை தேர்தல் இன்னும் ஒரு சில மாதங்களில் நடைபெற இருக்கும் நிலையில், இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஆயுதமாகி வருகிறது. குறிப்பாக பாஜக, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் மக்களவை தேர்தலுக்கான பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நரேந்திர மோடி மீண்டும் பிரதமரானால், 2024 மக்களவைத் தேர்தலே இந்தியாவில் கடைசி தேர்தலாக மாறும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் காங்கிரஸ் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு காங்கிரஸ் […]
ஒடிசா மாநிலம் பாராபதி-கட்டாக் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ பாஜக வேட்பாளர் திரௌபதி முர்முவுக்கு வாக்களித்ததாக வெளிப்படையாக கூறியுள்ளார். இன்று குடியரசு தலைவர் தேர்தல் நாடுமுழுவதும் கோலாகலமாக நடைபெற்று முடிந்துள்ளது. ஆளும் பாஜக கூட்டணி சார்பில் ஒடிசாவை சேர்ந்த திரௌபதி முர்மு அவர்களும், எதிர்க்கட்சி காங்கிரஸ் கூட்டணி சார்ப்பில் யஷ்வந்த் சின்ஹாவும் போட்டியிட்டனர். இதில் ஆளுங்கட்சி நிறுத்தும் வேட்பாளருக்கு தான் வெற்றி ஏறக்குறைய உறுதி என்றாலும், அனைத்து எதிர்க்கட்சி உறுப்பினர்களும் சரியாக வாக்களித்து, சில நடுநிலை கட்சிகளும் ஆதரவளித்தால் […]
அசாம் மாநிலத்தில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த கூட்டணியில் அசாம் கனபரிஷத், போடாலேண்ட் மக்கள் முன்னணி ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த நிலையில் அசாம் கனபரிஷத் கட்சி பாரதிய ஜனதா கூட்டணியில் இருந்து விலக போவதாக எச்சரித்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் அதுல்போரா மாநில விவசாய துறை மந்திரியாக உள்ளார். அவர்தான் இந்த அறிவிப்பை வெளியிடடு இருக்கிறார். அசாம் மாநிலத்தில் அண்டை நாடான வங்காள தேசத்தில் இருந்து ஏராளமான முஸ்லிம்கள் குடியேறி […]
2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது பிரசார கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மகாத்மா காந்தியை ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவர்கள் தான் கொன்றனர் என கூறினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், மகாராஷ்டிர மாநில ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் பிவான்டி நீதிமன்றத்தில் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையில் கடந்த முறை ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்கு அளிக்கப்பட்ட நிலையில், இன்று இவ்வழக்கு […]
ஜம்மு காஷ்மீர் மாநிலம், ஹிராநகர் பகுதியில் கடந்த மாதம் பேரணி ஒன்று நடைபெற்றது. அதில், முன்னாள் பா.ஜ.க. மந்திரி லால் சிங்கின் சகோதரரான ராஜிந்தர் சிங் அலியாஸ் பாபி என்பவர் காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தியை அவதூறாக பேசியுள்ளார். அவர் பேசிய வீடியோ சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவியதை அடுத்து, அவர் மீது காஷ்மீர் போலீசார் அவதூறு வழக்கு பதிவு செய்தனர். வழக்கு பதியப்பட்டதை அடுத்து, ராஜிந்தர் சிங் அலியாஸ் கைது நடவடிக்கைகளுக்கு பயந்து தலைமறைவானார். இந்நிலையில், […]
பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்ட திடுக்கிடும் தகவலை போலீசார் வெளியிட்டுள்ளனர். இத்தகவல் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக மத்திய மந்திரி அருண்ஜெட்லி அரசியல் கட்சிகள் மீது குற்றம் சாட்டியுள்ளார். அவர் தனது வலை தள பக்கத்தில் கூறிதாவது:- கடந்த சில நாட்களாக மாவோயிஸ்டு பயங்கரவாத நடவடிக்கைகள் அதிகரித்து இருப்பதை உணர முடிகிறது. அந்த அமைப்பின் ஆதிக்கம் இல்லாத பகுதிகளிலும் பயங்கரவாத சம்பவங்கள் நடந்து வருகின்றன. இது தேசத்துக்கு மிகப் பெரிய […]
இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசியக்குழு உறுப்பினர் ஆர்.நல்லகண்ணு திருச்சியில் நிருபர்களிடம் கூறியதாவது:- காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்து அரசிதழில் வெளியிட்டு தற்போது முடிவுக்கு வந்தது. முதல் கட்டமாக வருகிற 12-ந்தேதி மேட்டூர் அணையில் தண்ணீர் திறந்து விடவேண்டும். அதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும். தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது போலீசார் வழக்கு போடுவது மற்றும் கைது நடவடிக்கைகளிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதை கைவிட வேண்டும். அங்கு அமைதியை நிலை நாட்ட தமிழக அரசு முயற்சிக்க […]