மராட்டிய சட்ட மேல்-சபை தொகுதிகளான மும்பை பட்டதாரிகள் தொகுதி, ஆசிரியர்கள் தொகுதி, கொங்கன் பட்டதாரிகள் தொகுதி, நாசிக் ஆசிரியர்கள் தொகுதி ஆகிய 4 தொகுதி உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம்(ஜூலை) 7-ந் தேதி நிறைவு பெறுகிறது. இந்த தொகுதிகளுக்கு வருகிற 25-ந் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதில் பட்டதாரிகள் தொகுதிக்கு அந்த தொகுதியில் வசிக்கும் பட்டம் பெற்றவர்களும், ஆசிரியர்கள் தொகுதிக்கு அங்குள்ள ஆசிரியர்கள் அனைவரும் வாக்களித்து வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். இந்தநிலையில் கொங்கன் பட்டதாரிகள் மற்றும் மும்பை ஆசிரியர்கள் […]