தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து,கல்விக்கடன் ரத்து உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும்,,காவல்துறை மரணங்கள் அதிகரித்துள்ளது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை கூறி திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜகவினர் இன்று உண்ணாவிரதப் போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர்.அந்த வகையில்,சென்னை வள்ளுவர் கோட்டத்தில், மாநில தலைவர் அண்ணாமலை தலைமையிலும், கோவையில் மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,தமிழகத்தை இரண்டாக பிரிக்க வேண்டும் என்று நினைத்தால் பிரித்து விடுவோம் பாஜக எம்எல்ஏ […]