பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்களுக்கு மத்தியில் பிரபலமான பாலாஜி முருகதாஸ் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அந்த வகையில் இவர் தற்போது வா வரலாம் வா என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படத்தினை எஸ்.பி.ஆர் மற்றும் எல்.ஜி.ஆர் ஆகியோர் சேர்ந்து இயக்கியுள்ளார்கள். படத்தில் பாலாஜி முருகதாஸுடன் மஹானா சஞ்சீவி, ரெடினா கிங்ஸ்லி, காயத்ரி ரம்யா, மைம் கோபி, சிங்கம் புலி, சரவணன் சுப்பையா, தீபா, வையாபுரி, அஷ்மிதா சிங் உள்ளிட்ட பல […]
பாலாஜி முருகதாஸ் தான் பிக் பாஸ் அல்டிமேட் டைட்டில் வின்னர். ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. 70 நாட்களுக்கு மேலாக ஒளிபரப்பப்பட்டு வந்த இந்த நிகழ்ச்சியில் நேற்று கிராண்ட் பைனல் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதில் இறுதிப் போட்டியாளர்களாக நிரூப் நந்தகுமார் மற்றும் பாலாஜி முருகதாஸ் தேர்வு செய்யப்பட்ட நிலையில், பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் டைட்டில் வின்னராக பாலாஜி முருகதாஸ் தான் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.