கடந்த 2023 அக்டோபர் 7ஆம் தேதி பாலஸ்தீன ஆதரவு அமைப்பான ஹாமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 1100 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்ததில் பெரும்பாலும் பொதுமக்களே அதிகம் என இஸ்ரேலிய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதலின் போது சுமார் 250 பேரை பிணை கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் கடத்தி சென்றனர். அவர்களில் பலர் விடுவிக்கப்பட்டுவிட்டனர். ஹமாஸ் தாக்குதலை அடுத்து இஸ்ரேல் ராணுவம் ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன நாட்டின் காசா நகரில் […]
கடந்த அக்டோபர் மாதம் 7ஆம் தேதி துவங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் போர் 50 நாட்களை கடந்து நடைபெற்று வந்தது. இந்த போரின் விளைவாக இஸ்ரேல் தரப்பில் 1200 பேர் உயிரிழந்தனர். 240 பேர் பிணைக் கைதிகளாக ஹமாஸ் அமைப்பினரால் கொண்டு செல்லப்பட்டனர். அதே போல, இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரையில் 14 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1500க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் நீட்டிப்பு.! […]
பாகிஸ்தானில் ஹபீஸ் சயீதின் கூட்டத்தில் கலந்துகொண்ட தூதரைப் பாலஸ்தீன அரசு திரும்பப் பெற்றுக்கொண்டது. இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலத்தை அங்கீகரித்த அமெரிக்காவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் பாகிஸ்தானின் ராவல்பிண்டி லியாகத் பாக்கில் கூட்டம் நடைபெற்றது. 2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதலில் தொடர்புடைய தீவிரவாதி ஹபீஸ் சயீது பங்கேற்ற இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தானுக்கான பாலஸ்தீனத் தூதர் வாலித் அபு அலியும் கலந்துகொண்டார். இது குறித்து டெல்லியில் உள்ள பாலஸ்தீனத் தூதர் அட்னான் அபு அல் ஹைஜாவிடம் இந்தியா கண்டனம் தெரிவித்தது. […]
பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் தொடர்ந்து நீடிக்கும் என பாலஸ்தீன அதிபர் மஹ்மூது அப்பாஸ் அறிவித்துள்ளார். இஸ்ரேல் தலைநகரமாக ஜெருசலேமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்ததை தொடர்ந்து பாலஸ்தீனத்தில் போராட்டமும், மோதலும் வெடித்தது. மேற்கு ஆசிய நாடுகளான ஜோர்டான், துருக்கி, பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகளிலும் போராட்டம் வெடித்தது. ட்ரம்ப்பின் அறிவிப்பையடுத்து இஸ்லாமிய கூட்டமைப்பின் அவசர மாநாடு இஸ்தான்புல்லில் நடைபெற்றது. இதில் உரையாற்றிய பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ், பாலஸ்தீனத்தின் தலைநகராக ஜெருசலேம் தொடர்ந்து நீடிக்கும் […]