பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆளும் பாஜக அரசு தலைமையில் கூடும் கடைசி நாடாளுமன்ற கூட்டத்தொடரின் கடைசி நாள் இன்று நடைபெற்று வருகிறது. முன்னதாக பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 31ஆம் தேதி குடியரசு தலைவர் உரையுடன் இடைக்கால பட்ஜெட் தொடர் தொடங்கியது. நேற்று (பிப்ரவரி 9) கூட்டம் நிறைவடையும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அலுவல் பணிகள் காரணமாக இன்று ஒரு நாள் கூட்டத்தொடர் நீட்டிக்கப்பட்டுள்ளது.