ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதுதான் பாரத ரத்னா. அதன்படி, ஜனவரி 2,1954 முதல் அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் உள்ளிட்ட துறைகளில் சிறப்பாக செயல்பட்டு சாதனை புரிந்தவர்களுக்கு பாரத ரத்னா வழங்கப்படுகிறது. அந்தவகையில், நாட்டிலேயே மிக உயர்ந்த விருதாக மதிக்கப்படும் பாரத ரத்னா விருது, பீஹார் முன்னாள் முதல்வர் கர்ப்பூரி தாக்கூர் மற்றும் பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். இந்த நிலையில், […]
சுதந்திர போராட்ட வீரரும், பீகார் மாநில முன்னாள் முதலமைச்சருமான கர்பூரி தாக்கூருக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மிகவும் பின்தங்கிய சமூகப் பிரிவில் பிறந்த கர்பூரி தாக்கூர், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்று சிறைவாசம் சென்றவர். பிரஜா சோசலிஸ்ட் கட்சியுடன் தனது அரசியல் வாழ்க்கையைத் தொடங்கிய கர்பூரி தாக்கூர், 1977 – 1979 காலகட்டத்தில் பீகார் மாநில முதலமைச்சராக பதவி வகித்தபோது ஜனதா கட்சியில் ஐக்கியமானார். அரசு பணி, கல்வியில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியலினத்திற்கு […]