மத்திய அரசின் தடையை தொடர்ந்து சென்னையில் உள்ள பிஎப்ஐ தலைமை அலுவலகத்திற்கு காவல்துறையினர் சீல் வைத்துள்ளனர். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட நாடு முழுவதும் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தொடர்புடைய அலுவலகங்கள், நிர்வாகிகளின் வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பு சோதனை நடத்தியது. இந்த சோதனையின்போது நாடு முழுவதும் 100க்கும் மேற்பட்ட பிஎஃப்ஐ நிர்வாகிகள் கைது செய்யப்பட்டனர். இதனைத்தொடர்ந்து, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா சட்டவிரோதமான இயக்கம் என கூறி 5 […]
தமிழ் நாடு அரசிடமும், காவல்துறையிடமும் சட்டப்படி அனுமதி பெற்று திட்டமிட்டபடி மனித சங்கிலி போராட்டத்தை நடத்த முயற்சி செய்வோம் என கே.பாலகிருஷ்ணன் ட்வீட். அக்டோபர் 2-ஆம் தேதி நடைபெற உள்ள ஆர்எஸ்எஸ் ஊர்வலத்துக்கு தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல்துறை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பொது அமைதியை நிலைநாட்ட வேண்டியுள்ளதால் தமிழகத்தில் அக்டோபர் 2-ஆம் தேதி எந்த இடத்திலும் எந்த அமைப்பும் ஊர்வலம் நடத்த அனுமதியில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. காவல்துறை அனுமதி மறுத்ததை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.எஸ். முறையீடு […]