ஐசிசி சமீபத்திய தரவரிசையை புதன்கிழமை வெளியிட்டது. ஒருநாள் போட்டித் தரவரிசை பட்டியலில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் பாபர் அசாம் மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடித்த சுப்மான் கில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். ஐசிசி புதன்கிழமை வெளியிட்ட ஒருநாள் போட்டித் தரவரிசையில் பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் புள்ளி பட்டியலில் 824 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்தார். இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் சுப்மான் கில் 810 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டார். நட்சத்திர பேட்ஸ்மேன் […]
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது கைப் அவர்கள் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா குறித்து புகழ்ந்து பேசியுள்ளார். அதாவது ஜஸ்பிரித் பும்ரா தான் ஆசியாவின் சிறந்த வீரர், மேலும் கூலான வீரர் என தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல், ரசிகர்கள் விராட் கோலி முதல் தோனி வரை உள்ளவர்களை பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஆனால் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பற்றி யாரும் அவ்வளவாக பேசுவதில்லை. அவருக்கு போதுமான அளவு பாராட்டும் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.