பாமக நிறுவனர் ராமதாஸ்,அக்கட்சியின் மாநில தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்டோர் மீதான வழக்குகள் ரத்து. கடந்த 2012,2013-இல் மாமல்லபுரத்தில் நடந்த வன்னியர் இளைஞர் பெரு விழா மாநாடுகளில் காவல்துறை அனுமதி அளித்த நேரத்தை தாண்டி இரவு 10 மணிக்கு பிறகும் தொடர்ந்து கூட்டம் நடத்தியதாகவும்,மாநாட்டில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேசியதாகவும் பாமக கட்சியின் நிறுவனர் ராமதாஸ்,அன்புமணி ராமதாஸ் மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.இதனை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில்,பாமக நிறுவனர் […]
பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக ஜி.கே.மணி அவர்கள்,கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வந்த நிலையில்,அவர் தனது பதவியை நிறைவு செய்ததையடுத்து பாராட்டு விழா நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில்,பாட்டாளி மக்கள் கட்சியின் சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை 11.00 மணி முதல் திருவேற்காட்டில் நடைபெற்று வரும் நிலையில்,பாமக தலைவராக அன்புமணி ராமதாஸ் அவர்களை ஒரு மனதாக தேர்வு செய்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு முதல் பாமகவில் இளைஞரணி தலைவராக இருந்து வந்த […]
அரசு கல்லூரி,பல்கலை.ஆசிரியர்களுக்கு பதவி உயர்வை விரைந்து வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் பல ஆண்டுகளாக பதவி உயர்வு கிடைக்காததால் மனச்சோர்வும்,மன உளைச்சலுக்கும் ஆளாகும் கல்லூரி ஆசிரியர்கள்,விரக்தியில் கல்வி மற்றும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்தாததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர் எனவும்,இவற்றைக் கருத்தில் கொண்டு அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு அவர்களின் பணி நிறைவு ஆண்டுகளின் அடிப்படையில் வழங்கப்பட வேண்டிய பதவி உயர்வுகளை தமிழக அரசு உடனடியாக […]
வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு ரூ. 18,090 கோடி கடன் வசதியை வழங்கியிருக்கும் மத்திய அரசு. ஈழத்தமிழர்கள் சிக்கலை விரைந்து தீர்க்க நிபந்தனை விதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். வரலாறு காணாத கடன் மற்றும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு முதற்கட்டமாக ரூ.18,090 கோடி கடன் வசதி அறிவித்துள்ள மத்திய அரசு,அதற்கான முதன்மை நிபந்தனையாக இலங்கையில் வாழும் ஈழத்தமிழர்களுக்கு 13-ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தின்படியான […]
என்.எல்.சி மூன்றாவது சுரங்கத்திற்காக அடிமாட்டு விலைக்கு நிலங்களை பறிக்கும் முயற்சி பலிக்காது என்றும்,கையகப் படுத்தப்படும் நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.1 கோடி வழங்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். என்.எல்.சி.மூன்றாவது சுரங்கத்திற்காக 26 கிராமங்களில் கையகப்படுத்தப் படவுள்ள நிலங்கள் கருப்பு வைரம் எனப்படும் நிலக்கரி புதைந்து கிடக்கும் பூமியாகும் என்றும்,இந்த நிலங்கள் அடுத்த பல பத்தாண்டுகளுக்கு என்.எல்.சி நிறுவனத்திற்கு பல்லாயிரம் கோடிகளை கொட்டிக் கொடுக்கக் கூடியவை.அத்தகைய நிலங்களுக்கு ஏக்கருக்கு ரூ.23 லட்சம் மட்டுமே வழங்கப்படும் என்பது […]
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின் போது,பெட்ரோல்,டீசல் மீதான வரிகளைக் குறைத்தல்,வருமான வரிச் சலுகைகள்,150 நாள் வேலையை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் ஜன.31-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.இந்நிலையில்,மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வருமானவரி விலக்கிற்கான உச்சவரம்பை ரூ.5 லட்சமாகவும்,நிரந்தரக் கழிவை ரூ.1 லட்சமாகவும் உயர்த்த வேண்டும் எனவும்,ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்ட வேலை நாட்களை 150 ஆக உயர்த்துதல் ஆகியவற்றுடன் […]
அண்ணாமலை பல்கலை.பேராசிரியர்களுக்கு ஏழாவது குழு ஊதியத்தை வழங்க சிறப்பு நிதியையும் தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் நிதி நெருக்கடி தீர்ந்த பிறகு தான் அதன் பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள் செயல்படுத்தப்படும் என்றால் அது எந்தக் காலத்திலும் நடக்க வாய்ப்பில்லை என்றும்,இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களுக்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைகளை செயல்படுத்தும்படி பல்கலைக்கழக நிர்வாகத்தை அறிவுறுத்த வேண்டும்,அதற்குத் தேவைப்படும் […]
ஒப்பந்தம் செய்யப்பட்ட கரும்பை வாங்கிக் கொள்ள இடைத்தரகர்கள் மறுப்பதும்,மற்றொருபுறம் விவசாயிகளிடமிருந்து ஒரு கரும்பைக் கூட அரசு அதிகாரிகள் நேரடியாக கொள்முதல் செய்யாதது ஆகியவை தான் கரும்பு உழவர்களின் கண்ணீருக்கு காரணமாகும் என்று கூறி,இவர்களின் கண்ணீரை தமிழக அரசு துடைக்குமா? என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். பொங்கல் பரிசு வினியோகம் தொடங்கி இன்றுடன் ஒரு வாரம் ஆகும் நிலையில்,இதுவரை உழவர்களிடமிருந்து ஒரு கரும்பு கூட நேரடியாக கொள்முதல் செய்யப்படவில்லை.அதற்கு காரணம் அதிகார வர்க்கமும், இடைத்தரகர்களும் தீட்டி […]
தமிழ்நாட்டில் மதுக்கடைகள் மூடப்பட வேண்டும் என்றும்,நோய்ப் பரவலுக்கு வழிவகுக்கும் மதுக்கடை பார்களையும் மூடுவதற்கு அரசு ஆனையிட வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.அதன்படி,ஏற்கனவே இதுகுறித்து முதல்வர் அவர்கள் ஆலோசனை நடத்திய நிலையில்,மாநிலம் முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள்,இரவு ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது. இதனையடுத்து,தமிழ்நாட்டில் இன்றுடன் ஊரடங்கு […]
அதிக மக்கள்தொகை கொண்ட மாவட்டங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை முடக்கும்.எனவே,தமிழ்நாட்டில் 12 லட்சம் பேருக்கு ஒரு மாவட்டம் என்ற அளவில் அனைத்து மாவட்டங்களையும் மறுசீரமைக்க அரசு முன்வர வேண்டும் எனவும்,இதற்காக மாவட்ட மறுவரையறை ஆணையத்தை அரசு அமைக்க வேண்டும் என்றும் கோரி முதல்வருக்கு,அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு வகையான நிர்வாகச் சிக்கல்களுக்கு காரணமாக இருக்கும் மாவட்ட எல்லைகளை சீரமைத்தல் மற்றும் பெரிய மாவட்டங்களை பிரித்தல் பணிகளுக்கு மாவட்ட மறுவரையறை ஆணையம் அமைக்கக் வேண்டும் என்று கோரி […]
ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு, திருத்தப்பட்ட தடை சட்டம் தான் தீர்வு என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் தெரிவித்திருக்கும் உத்தரவாதம் வரவேற்கத்தக்கது என்றும்,ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு,திருத்தப்பட்ட தடை சட்டம் தான் தீர்வு என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக,தனது அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது: “தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டப்பேரவையில் […]
கொரோனா தொற்று பரவலைத் தடுக்கவும்,மாணவச் செல்வங்களை பாதுகாக்கவும் 10, 11, 12 வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்க வேண்டும் எனவும்,மக்களைக் காக்க மதுக்கடைகளை மூட வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பு காரணமாக இன்று முதல் இரவு 10 மணியிலிருந்து அதிகாலை 5 மணி வரை இரவுநேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகளில்,அத்தியாவசிய பணிகளான பால்,பத்திரிகை […]
இனி ஆன்லைன் சூதாட்டத்தை தமிழக அரசு அனுமதித்தால்,அது மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாக அமையும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் சமீபத்தில் நிகழ்ந்த அனைத்து தற்கொலைகளுக்கும் காரணம் ஆன்லைன் சூதாட்டத்தில் பணத்தை இழந்து கடனாளி ஆனது தான் எனவும், ஆன்லைன் சூதாட்ட சாத்தானுக்கு இன்னும் எத்தனை பேரை பலி கொடுக்க போகிறோம்?,எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும்,தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நாளை தொடங்கவுள்ள நிலையில்,வரும் கூட்டத்தொடரிலேயே ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்காக […]
தமிழ்நாட்டில் புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்கும் திட்டங்கள் 2014 முதல் 2019 வரை அறிவிக்கப்பட்டவை என்றும்,அதன்பின் 7 ஆண்டுகளாகியும் மருத்துவக் கல்லூரிகள் அமைக்கப்படாததை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டில் ராணிப்பேட்டை,திருப்பத்தூர்,மயிலாடுதுறை,தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் தனியார் மருத்துவக் கல்லூரிகளும் இல்லை என்பதால் அவற்றில் மத்திய அரசின் நிதியுதவியுடன் கூடிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க அனுமதி கோரலாம் எனவும்,இது குறித்து மத்திய அரசுடன் தமிழக அரசு பேச்சு நடத்த […]
கீழடி அகழாய்வு தொடர்பாக 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட நடவடிக்கை தேவை என்று தமிழக அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். கீழடி அகழாய்வின் முதல் மூன்று கட்ட அறிக்கைகளை விரைந்து வெளியிட வேண்டும் என உயர்நீதிமன்றம் ஆணையிட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லை எனவும்,கீழடி அகழாய்வு தொடர்பாக 6 கட்ட அறிக்கைகளையும் விரைந்து வெளியிட நடவடிக்கை தேவை மற்றும் எட்டாவது கட்ட அகழாய்வை விரைவில் தொடங்க வேண்டும் என்றும் […]
தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள் என்றும்,அவர்கள் எதிர்பார்க்கும்,ஏங்கிக் கொண்டிருக்கும் நல்லவைகள் நடந்தே தீரும். அதை உறுதி செய்வதற்கு தேவையான ஆலோசனைகளை இளைஞர்கள் படைக்கு பாட்டாளி மக்கள் கட்சி வழங்கும்;வழிநடத்தும் என்றும் பாமக நிறுவனர் டாக்டர்.ராமதாஸ் தெரிவித்துள்ளார். புத்தாண்டு,புதிய பாதை,புதிய நம்பிக்கை,வெற்றிகளைக் குவிக்க உறுதியேற்போம் என்றும்,உறுதியான,குலையாத நம்பிக்கைகளுடன் 2022-ஆம் ஆண்டை வரவேற்று கொண்டாடும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் தனது இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாகவும் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர். ராமதாஸ் கூறியுள்ளார். […]
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். மழை வெள்ள பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க தமிழக அரசு கோரிய ரூ.4,626 கோடி நிதியை மத்திய அரசு வழங்க வேண்டும் என்றும்,மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துக் குடும்பங்களுக்கும் தலா ரூ.5,000 நிதியுதவி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது […]
சென்னை & சேலம் பசுமை வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப் பட்டால் 7,000 விவசாயக் குடும்பங்கள் வாழ்வாதாரங்களை இழப்பார்கள் எனவும்,இந்த 8 வழி பசுமைச்சாலை திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். சென்னை & சேலம் இடையிலான எட்டு வழி பசுமைச் சாலைத் திட்டத்தை செயல்படுத்துவதற்கான பணிகளை மத்திய அரசு மீண்டும் தொடங்கி விட்டதாக வெளியாகியுள்ள செய்திகள் கவலையளிக்கின்றன என்றும்,இத்திட்டத்தை தமிழக அரசு அனுமதிக்கக்கூடாது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். […]
கிணற்றில் போட்ட கல்லாக நீட் விலக்கு சட்டம் உள்ளதாகவும்,இதன் அடுத்தக் கட்டம் பற்றி விவாதிக்க அனைத்துக் கட்சிக் கூட்டம் வேண்டும் என்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் நீட் தேர்வு தொடர்பாக இனி ஒருவரைக் கூட பலி கொடுக்கக் கூடாது.அதற்கான ஒரே தீர்வு நீட் விலக்கு சட்டத்திற்கு ஒப்புதல் பெறுவது தான் என்றும்,நீட் விலக்கு சட்டத்தை நிறைவேற்றி விட்டோம் என்பதுடன் அரசு ஒதுங்கி விடக் கூடாது.அடுத்த சில மாதங்களுக்குள் நீட் விலக்கு சட்டத்திற்கு குடியரசுத் தலைவரின் […]
அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை,’கிறிஸ்துமஸ்’ திருநாளாக கொண்டாடும் அனைவருக்கும் பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இயேசு கிறிஸ்து பிறந்த நாளை முன்னிட்டு டிச.25 ஆம் தேதியான இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மத்தியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி,கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில்,அன்பின் அடையாளமாகவும் கருணையின் வடிவமாகவும் வாழ்ந்த இயேசு கிறிஸ்துவின் பிறந்தநாளை கிறிஸ்துமஸ் திருநாளாக கொண்டாடும் […]