தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் பள்ளி குழந்தைகளிடம் தீண்டாமை கடைபிடித்த வழக்கில், குற்றவாளிகளுக்கு 6 மாதம் கிராமத்திற்குள் நுழைய தடை என நெல்லை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தென்காசி மாவட்டம் பாஞ்சாகுளம் கிராமத்தில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு வீடியோ வெளியாகி தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதில் பள்ளி குழந்தைகள் அருகில் உள்ள கடைக்கு மிட்டாய் வாங்க செல்கின்றனர். அப்போது அந்த கடைக்காரர், உங்களுக்கு மிட்டாய் கொடுக்க கொடுக்க கூடாது […]
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஒரு கிராமத்தில் பள்ளி மாணவர்களிடம் தீண்டாமை கடைபிடித்த விவகாரத்தில் ஏற்கனவே 2 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே, பாஞ்சாகுளம் கிராமத்தில் ஆதிதிராவிடர் பள்ளியில் படிக்கும் சில மாணவர்களுக்கு, தின்பண்டங்கள் விற்பனைக்கு தரமறுத்த கடை உரிமையாளர் விவகாரம் தமிழகம் முழுவதும் பேசுபொருளாகியுள்ளது. அதுவும், அந்த குழந்தைகளிடம், இது ஊர்க்கட்டுப்பாடு, உங்களுக்கு தர மாட்டேன். உங்கள் பெற்றோர்களிடம் […]